கோடநாடு பங்களா
கோடநாடு பங்களா

அவங்கள ஏன் இன்னும் விசாரிக்கல?

கோடநாடு வழக்கில் போலீஸின் மறுவிசாரணை நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. கோடநாட்டில் கொலை, கொள்ளை நடந்த அன்று இரவு, அதில் தொடர்புடைய 10 பேர் கூடலூர் செக் போஸ்ட்டில் போலீஸிடம் பிடிபட்டனர். அப்போது அவர்களை, கூடலூர் அதிமுக புள்ளியின் அக்காள் மகன்தான் போலீஸ் பிடியில் இருந்து விடுவித்தாராம். இது ஊரறிந்த ரகசியமாகிவிட்ட நிலையில், அந்த அதிமுக பிரமுகரையோ அவரது அக்காள் மகனையோ போலீஸ் இன்னும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரவில்லையாம். “இவர்களை விசாரித்தாலே இந்த வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்துவிடுமே... எதற்காக தயக்கம் காட்டுகிறது போலீஸ்? ” என்ற கேள்வியை கூடலூர் பகுதி சாமானியர்களும் இப்போது கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in