மத அடிப்படையில் வாக்கு கோரிய பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா... பாய்ந்தது வழக்கு

தேஜஸ்வி சூர்யா
தேஜஸ்வி சூர்யா

மத அடிப்படையில் வாக்கு கோரியதாக பெங்களூரு தெற்கு தொகுதி வேட்பாளரான தேஜஸ்வி சூர்யா மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும் சிட்டிங் எம்பியுமான தேஜஸ்வி சூர்யா மீது, மத அடிப்படையில் வாக்கு கேட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான பதிவில், ’சமூக ஊடகங்களில் மதத்தின் அடிப்படையில் வாக்குகளைக் கோரும் வீடியோவை தேஜஸ்வி சூர்யா வெளியிட்டதன் அடிப்படையில்’ அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான புகாரின் அடிப்படையில் பெங்களூரு ஜெயநகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான சௌமியா ரெட்டியை எதிர்த்து போட்டியிடும் தேஜஸ்வி சூர்யா, இரண்டாம் வாக்குப்பதிவினை முன்னிட்டு இன்று வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "காங்கிரஸ் கட்சி முற்றிலும் விரக்தியடைந்துள்ளது. 30 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. மாறாக பாஜக மேலும் வலுப்பெற்றுள்ளது" என்று பெருமிதம் தெரிவித்தார்.

வாக்களித்த தேஜஸ்வி சூர்யா
வாக்களித்த தேஜஸ்வி சூர்யா

கர்நாடகாவில் 2-ம் கட்ட மக்களவைத் தேர்தலின் பொருட்டு, 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தேசத்தின் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள 88 மக்களவைத் தொகுதிகளுடன் இணைந்து கர்நாடகாவின் 14 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!

தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!

தேர்தல் பணத்தில் ரூ.40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியினரே போஸ்டர் அடித்து கண்டனம்!

இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ

உச்சக்கட்ட கவர்ச்சியில் நயன்தாரா... தெறிக்கும் பாலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in