முதல்ல ஓட்டுதான்.. அடுத்துதான் கல்யாணம்... மகாராஷ்டிரா தேர்தலில் சுவாரஸ்யம்!

மணமகன் ஆகாஷ்
மணமகன் ஆகாஷ்

மகாராஷ்டிரா மாநிலத்தில் மணக்கோலத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த ஆகாஷ் எனும் இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. 8 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில், பொதுமக்கள், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இதில், அமராவதி மாவட்டம், வதர்புரா வாக்குச்சாவடியில் ஆகாஷ் என்பவர் மணக்கோலத்தில் வாக்களிக்க வந்ததுதான், அம்மாநிலத்தில் பெரிய கவனத்தையும் பெற்றது.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு

பாரம்பரிய ஷர்வானி மற்றும் தலைப்பாகை உடன் மாப்பிள்ளை கோலத்தில் வந்த ஆகாஷ், நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். அவர் மட்டுமின்றி, தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் தேர்தல் வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து வாக்களிக்க வைத்தார். பின்னர், குடும்பத்தினர் திட்டமிட்டப்படி மதியம் 2 மணியளவில் திருமண விழாவில் கலந்து கொண்டார். திருமண நாளில் கூட தேர்தலில் வாக்களிப்பதை தவிர்க்காமல், கடமை உணர்வுடன் வாக்களிக்க வந்து, வாக்குரிமையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஆகாஷ்.

இதுகுறித்து பேசிய ஆகாஷ், "ஒரு இந்திய குடிமகனாக வாக்களிக்க வந்தேன். என்னுடைய திருமணம் காத்திருக்கும். ஆனால், தேர்தல் எப்போதும் காத்திருக்காது. அதனால், குடும்பத்தினருடன் வாக்களிக்க வந்தேன். எனக்கு பிடித்த வேட்பாளருக்கு வாக்களித்தேன். நம்மை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இந்த தேர்தலில் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார். ஆகாஷ் வாக்களிக்க வருவதும், அவரது பேட்டி தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!

தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!

தேர்தல் பணத்தில் ரூ.40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியினரே போஸ்டர் அடித்து கண்டனம்!

இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ

உச்சக்கட்ட கவர்ச்சியில் நயன்தாரா... தெறிக்கும் பாலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in