ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்... டிஜிபி அதிரடி!

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி ரூபாய் 4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

சிபிசிஐடி போலீஸார்
சிபிசிஐடி போலீஸார்

கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் இது நெல்லை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என்றும் , பணம் பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர். எனவே இந்த வழக்கை தாம்பரம் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாம்பரம் போலீஸார் ஏற்கெனவே நயினார் நாகேந்திரனை விசாரணைக்கு ஆஜராகமாறு சம்மன் அனுப்பிய நிலையில், அவர் 10 நாட்கள் அவகாசம் கேட்டு தனது வழக்கறிஞர் மூலம் காவல் நிலையத்தில் கடிதம் அளித்தார். அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக வருகிற மே 2 ம்தேதி ஆஜராகுமாறு நயினார் நாகேந்திரனுக்கு போலீஸார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றும் படி தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தமிழக டிஜிபிக்கு பரிந்துரை செய்தார். ஆணையரின் பரிந்துரையை ஏற்று இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கும்படி தாம்பரம் போலீஸாரிடம் சிபிசிஐடி போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!

தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!

தேர்தல் பணத்தில் ரூ.40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியினரே போஸ்டர் அடித்து கண்டனம்!

இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ

உச்சக்கட்ட கவர்ச்சியில் நயன்தாரா... தெறிக்கும் பாலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in