தாமரை விரியணும்... அதிரடி கிளப்பிய நடிகை கீர்த்தி சுரேஷ் அம்மா!

அம்மாவுடன் கீர்த்தி சுரேஷ்
அம்மாவுடன் கீர்த்தி சுரேஷ்

”தாமரை விரியணும், சீக்கிரம் நல்ல மாற்றம் வரணும்” என நடிகை கீர்த்தி சுரேஷ் அம்மா நடிகை மேனகா கூறியுள்ளார். தேர்தலில் வாக்களித்தப் பின்பு இவர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்தியபிரதேசம் என மொத்தம் 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 88 தொகுதிளில் நடந்து வருகிறது. 

பொதுமக்களோடு பல திரைப்பிரபலங்களும் வரிசையில் நின்று காலை முதலே வாக்களித்தனர். கேரளா, தைக்காட்டில் இன்று நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா, அப்பா, அக்கா என குடும்பமே வாக்களித்தது.

மேனகா
மேனகா

வாக்களித்த பின்னர் கீர்த்தி சுரேஷ் அம்மா, நடிகை மேனகா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தாமரை விரிய வேண்டும் என்று பேசி பரபரப்பைக் கூட்டினார். ”கடந்த 15 ஆண்டுகளாக கேரளாவில் இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்கிறது. அதனால், இந்த முறை கேரளாவில் மாற்றம் வர வேண்டும். தாமரை நிச்சயம் விரியணும். 

திருச்சூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட சில தொகுதிகளில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். அங்குள்ள மக்களிடம் பேசும்போது தெரிகிறது. இருந்தாலும் இறுதி முடிவை மக்கள்தான் எடுப்பார்கள்” என்றார்.

கீர்த்தி சுரேஷின் தந்தை, தயாரிப்பாளர் சுரேஷ்குமார் பாஜக கட்சியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாஜக மாநிலக்குழு உறுப்பினராக உள்ளார். கேரளாவில் பாஜக சார்பில் சுரேஷ் போட்டியிடப் போகிறார் என்ற செய்தியும் முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

இந்தத் தேர்தலில் கீர்த்தி சுரேஷ் தனது வாக்கினைப் பதிவு செய்ய வரவில்லை. இதுகுறித்து மேனகாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “கீர்த்தி சுரேஷூக்கு தொடர்ச்சியாக படப்பிடிப்பு இருப்பதால் வர முடியவில்லை. அவர் பாண்டிச்சேரியில் ஷூட்டிங்கில் இருக்கிறார். பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வந்து பின் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து இங்கு வாக்களிக்க வர வேண்டும். இதனால், அவரது படப்பிடிப்பு பணிகளும் பாதிப்படையும். அவர் வாக்களிக்க வரமுடியாதது வருத்தம்தான்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!

தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!

தேர்தல் பணத்தில் ரூ.40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியினரே போஸ்டர் அடித்து கண்டனம்!

இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ

உச்சக்கட்ட கவர்ச்சியில் நயன்தாரா... தெறிக்கும் பாலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in