மோடி பதற்றமாக இருக்கிறார்; விரைவில் மேடையிலேயே அழப்போகிறார்... சொல்கிறார் ராகுல்காந்தி!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். சில நாட்களாக மோடி பதற்றத்தில் இருப்பது அவரது பேச்சில் இருந்து தெரிய வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலானது ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று நடைபெற்றது.

பீஜபூரில் ராகுல் காந்தி
பீஜபூரில் ராகுல் காந்தி

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பீஜபூரில் நடைபெற்ற பிரச்சாரப் பேரணியில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “சமீப நாட்களில் மோடி உரை நிகழ்த்தும்போது மிகவும் பதற்றத்துடன் காணப்படுகிறார். இன்னும் சில நாட்களில் அவர் மேடையில் கண்ணீர் கூட விடக்கூடும்.

கடந்த 10 ஆண்டுகளில் நரேந்திர மோடி ஏழைகளிடம் இருந்து பணத்தை மட்டுமே பறித்துள்ளார். நாட்டின் 70 கோடி மக்களிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறதோ, அதே அளவு செல்வத்தை 22 பேருக்கு வழங்கியுள்ளார். வேலையில்லா திண்டாட்டத்தையும், பணவீக்கத்தையும் நீக்கி காங்கிரஸ் கட்சி உங்களுக்கு பங்களிப்பை வழங்கும்.

பீஜபூரில் ராகுல் காந்தி
பீஜபூரில் ராகுல் காந்தி

கோடீஸ்வரர்களுக்கு நரேந்திர மோடி எவ்வளவு பணம் கொடுத்தாரோ, அவ்வளவு பணத்தை நாங்கள் இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கு கொடுப்போம். கர்நாடகாவில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். இதன்மூலம் இங்குள்ள மக்கள் ஏராளமான நன்மைகளைப் பெறுகிறார்கள். நரேந்திர மோடி சிலரை கோடீஸ்வரர்களாக்கினார். காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!

தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!

தேர்தல் பணத்தில் ரூ.40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியினரே போஸ்டர் அடித்து கண்டனம்!

இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ

உச்சக்கட்ட கவர்ச்சியில் நயன்தாரா... தெறிக்கும் பாலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in