ரீல்ஸ் மோகம்... ஸ்பைடர் மேன் உடை அணிந்து பைக்கில் வித்தை காட்டிய ஜோடியை வளைத்த போலீஸ்!

ரீல்ஸ் மோகம்... ஸ்பைடர் மேன் உடை அணிந்து பைக்கில் வித்தை காட்டிய ஜோடியை வளைத்த போலீஸ்!

ஸ்பைடர் மேன் போல உடை அணிந்து ரீல்ஸ் மோகத்தில் நடுரோட்டில் வித்தைக் காட்டியுள்ளது ஒரு ஜோடி. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகவே இவர்களை டெல்லி டிராஃபிக் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

ரீல்ஸ் மோகத்தில் காரின் மேல் ஏறி நடனம், விலையுயர்ந்த பொருட்களை உடைப்பது, அந்தரத்தில் நின்று சாகசம் எனப் பல பகீர் சம்பவங்களை தினந்தோறு நடத்துகிறார்கள். அப்படியான ஒரு சம்பவம்தான் டெல்லி துவாரகா பகுதியில் நடந்திருக்கிறது. சூப்பர் ஹீரோக்கள் ஸ்பைடர்மேன் மற்றும் ஸ்பைடர் வுமன் போல உடையணிந்து ரீல்ஸ் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வித்தை காட்டி இருக்கிறது ஒரு ஜோடி.

அவர்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, இரண்டு பேரையும் டெல்லி டிராஃபிக் போலீஸார் இன்று கைது செய்தனர். ஹெல்மெட் அணியாமல் நடுரோட்டில் வித்தைக்காட்டி, கண்ணாடி மற்றும் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் பயணம் செய்து போக்குவரத்து விதிகளை மீறியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சமூகவலைதளங்களில் இந்த ஜோடி ‘ஸ்பைடர்மேன் கப்புள்’ எனப் பரவலாக அறியப்படுகிறது. ஸ்பைடர்மேன் போல உடையணியும் 20 வயதான நஜாப்கர் தனது சூப்பர் ஹீரோ உடையை அணிந்து கொண்டு பொதுவில் இதுபோன்ற ஸ்டன்ட் செய்வது முதல்முறை கிடையாது.

இந்தியன் ஸ்பைடர் மேனாக தன்னை உருவகித்துக் கொள்ளும் இவர், ரீல்ஸ் மோகத்தில் பல கிரியேட்டிவ் வீடியோக்களைப் பகிர்ந்து வைரலானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!

தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!

தேர்தல் பணத்தில் ரூ.40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியினரே போஸ்டர் அடித்து கண்டனம்!

இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ

உச்சக்கட்ட கவர்ச்சியில் நயன்தாரா... தெறிக்கும் பாலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in