60 வயதைக் கடந்தும் ஹீரோவாக நடிக்கும் நடிகர்கள்!

காமதேனு

நடிச்சா ஹீரோவாகதான் நடிப்பேன் என 60 வயதைக் கடந்தும் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் சக்ரவர்த்திகளாக வலம் வருகிறார்கள் சில ஹீரோக்கள். இதில் 73 வயதைக் கடந்தும் தமன்னா, மாளவிகா மோகனன் என இந்தத் தலைமுறை ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடனமும் ஆடி வருகிறார் ரஜினி.

5 வயதில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்த பயணம் 69 வயதாகியும் ஹீரோவாகக் கலக்கி வருகிறார் கமல். சினிமாவில் புது முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற தாகம் இப்போதும் அவரிடம் இருப்பது ரசிகர்களுக்கான உற்சாகம்.

72ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி. கமர்ஷியல் ஹீரோ என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து ’நண்பகல் நேரத்து மயக்கம்’, ‘காதல் தி கோர்’ என சமீபகாலங்களாக கதையின் நாயகனாக வலம் மம்முட்டி இப்போதும் மலையாள சினிமாக்களின் எவர்கிரீன் ஹீரோ.

'த்ரிஷ்யம்’, ‘லூசிபர்’ என கதைக்கான படங்கள், மாஸ் படங்கள் என கலந்து கட்டி மலையாள திரையுலகை ஆட்சி செய்கிறார் மோகன்லால். 63 வயதைக் கடந்த மோகன்லாலுக்கு தமிழகத்திலும் நிறைய ரசிகர்கள் உண்டு.

மகன் ராம்சரணுக்கு போட்டியாக 68 வயதைக் கடந்தும் தெலுங்கில் ஹீரோவாகக் கலக்கி வருகிறார் சிரஞ்சீவி. ஒவ்வொரு பட ரிலீஸின் போதும் ரசிகர்களின் ஆரவாரம் தொடர்கிறது.

ஆகாயத்தில் அந்தர்பல்டி, ஒரே நேரத்தில் 500 பேர் எதிரே வந்தாலும் அசால்ட்டாக அடிப்பது என 64 வயதைக் கடந்தும் தெலுங்கில் மாஸ் காட்டி வருகிறார் பாலகிருஷ்ணன்.

ஒரு காலத்தில் நகைச்சுவை நடிப்பில் கவுண்டமணியும், ஹீரோவாக ராமராஜனும் கொடி கட்டிப் பறந்தார்கள். இப்போது ஹீரோவாக 83 வயதில் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தில் கம்பேக் கொடுக்கிறார் கவுண்டமனி. ராமராஜன் மீண்டும் ஹீரோவாக 63 வயதில் ‘சாமனியன்’ படத்தை ரிலீஸூக்குத் தயார் செய்கிறார்.

பாலிவுட்டின் பிக் பி அமிதாப். 81 வயது இளைஞனாகத் தொடர்ந்து ஹீரோவாக இந்தத் தலைமுறை ஹீரோக்களுக்கும் டஃப் கொடுத்து வருகிறார்.

பல ஹிட் படங்களைக் கொடுத்த வெள்ளி விழா நாயகனாக 67 வயதிலும் ‘ஹரா’ படம் மூலம் ஹீரோவாக மீண்டும் களமிறங்குகிறார் மைக் மோகன்.

கன்னட சினிமாவின் மாஸ் ஹீரோ சிவராஜ் குமார். 61 வயதைக் கடந்தும் அதிரடி காட்டி வருகிறார்.