பஞ்சாப்பை பஞ்சராக்கிய சுனில் நரைன் - பிலிப் சால்ட் ஜோடி... 261 ரன்கள் குவித்த கொல்கத்தா!

கொல்கத்தா அணி
கொல்கத்தா அணி

இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 261 ரன்களை சேர்த்துள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணியின் ஓப்பனர்களாக சுனில் நரைன் - பிலிப் சால்ட் களமிறங்கினர். இவர்கள் இருவரும் பஞ்சாபின் பந்துவீச்சை பஞ்சாக பறக்கவிட்டனர். இதனால் கொல்கத்தா அணி 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 137 ரன்களைச் சேர்த்தது.

4 சிக்சர்கள் விளாசி 71 ரன்களைச் சேர்த்திருந்த சுனில் நரைன் 11ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். பின்னர் 13ஆவது ஓவரில் பிலிப் சால்ட் 75 ரன்களில் ( 37 பந்துகள்) போல்டானார். தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் - ரஸல் இணை கைகோத்தது. ரஸல் 24 ரன்களில் விக்கெட்டானார்.

சுனில் நரைன் பிலிப் சால்ட்
சுனில் நரைன் பிலிப் சால்ட்

3 சிக்சர்கள் விளாசி 10 பந்துகளில் 28 ரன்களை சேர்த்து அதிரடி காட்டிய ஸ்ரேயஸ் ஐயரை அர்ஷ்தீப் சிங் அவுட்டாக்கினார். தொடர்ந்து வந்த ரின்கு சிங் 5 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தின் கடைசி பந்தில் 38 ரன்களில் வெங்கடேஷ் ஐயர் ரன்அவுட் ஆனார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா 261 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், ராகுல் சாஹர், சேம் கரன், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

மிட்சல் ஸ்டார்க்
மிட்சல் ஸ்டார்க்

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ரூ.24.75 கோடி கொடுத்து வாங்கப்பட்ட கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் மிட்சல் ஸ்டார்க் சேர்க்கப்படவில்லை. ஐபிஎல் ஏலத்தில் ரூ.24.75 கோடி கொடுத்து கேகேஆர் அணி மிட்சல் ஸ்டார்க்கை வாங்கியது. தோனி, விராட் கோலி, பும்ரா உள்ளிட்டோரை விடவும் அதிக சம்பளத்தை மிட்சல் ஸ்டார்க் பெற்றதால், அவரின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றபடி எந்த போட்டியிலும் ஸ்டார்க் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து ஸ்டார்க் நீக்கப்பட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!

தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!

தேர்தல் பணத்தில் ரூ.40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியினரே போஸ்டர் அடித்து கண்டனம்!

இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ

உச்சக்கட்ட கவர்ச்சியில் நயன்தாரா... தெறிக்கும் பாலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in