
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் காதல் வலையிலும் புல்லி கேங்கிலும் சிக்கியுள்ள ஐஷூ குறித்து அவரது அம்மா கவலையாக போட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
பிக் பாஸ்7 தமிழ் நிகழ்ச்சியில் அமீரின் தங்கையான ஐஷூ அவரது பரிந்துரையின் பேரில் இந்த சீசனில் போட்டியாளராக நுழைந்துள்ளார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த ஐஷூ, நிக்சனுடன் ஜாலியா பேசுவது, மாயாவுடன் சேர்ந்து சதி வேலைகள் செய்வது என பிக் பாஸ் இல்லத்திற்குள் அவரது செயல்பாடுகள் பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்பட செய்திருக்கின்றன.
குறிப்பாக, பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியதில் ஐஷூவுக்கும் பங்குண்டு என்பதால் ரசிகர்கள் அவருக்கு நாமினேஷனில் குறைந்த வாக்குகளே கொடுத்துள்ளனர். மேலும், நிக்சனுடன் அவர் நெருக்கமாக பழகி வருவதால் வெளியே அவருடைய பாய் ஃபிரண்ட் நிரூபுக்கு துரோகம் செய்கிறாரா என்ற ரீதியிலும் அவரைப் பற்றிய கமென்ட்டைப் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் தான் அவரது அம்மா ஷைஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ’எல்லாவற்றையும் உணர்ந்து நீ நீயாகவே இரு ஐஷூ. எங்களுக்கு இந்த ஐஷூ வேண்டாம், நாங்கள் எங்களுடைய ஐஷூவை பார்க்க விரும்புகிறோம். உண்மையான கண்கள் எது, உண்மையான பொய் எது என நீ உணர்வாய் என நம்புகிறேன்’ என அந்த பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்! முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!
ஹனிமூனில் அசோக்செல்வனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!
மேலும் 38 மீனவர்கள் விடுதலை- நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்
பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்னென்ன? எகிறும் எதிர்பார்ப்பு!