நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்! முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!

பட்டதாரிகளான தொழிலாளிகள்
பட்டதாரிகளான தொழிலாளிகள்

வறுமையால் வேலைக்கு சென்ற பெண்கள், தனியார் நிறுவன உரிமையாளரின் உதவியால் படித்து பட்டம் பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, 9,776 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பட்டம் பெற்ற சிலர், வேலைக்கு சென்றபடியே படித்து பட்டம் பெற்றுள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலைக்கு சென்று படித்து பட்டம் பெற்ற மாணவிகள்
வேலைக்கு சென்று படித்து பட்டம் பெற்ற மாணவிகள்

இதில், கோவையில் செயல்பட்டு வரும் கேபிஆர் நிறுவனத்தில் பணியாற்றியபடியே பட்டம் பெற்ற 3 மாணவிகள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர். குடும்ப வறுமை காரணமாக கல்வியை தொடர முடியாத நிலை உருவானதால், மில் பணியில் இணைந்ததாக தெரிவித்துள்ள அவர்கள், பணியில் இருந்தபடியே படித்து தற்போது பட்டம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வேலைக்கு சென்று படித்து பட்டம் பெற்ற மாணவிகள்
வேலைக்கு சென்று படித்து பட்டம் பெற்ற மாணவிகள்

பணிக்கு சென்றாலும், படிப்பை தொடர வாய்ப்புள்ளது என்பதை உணர்த்தும் வகையில் பட்டம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் ஐஸ்வர்யா, திவ்யா, முத்துலட்சுமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்! முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!

ஹனிமூனில் அசோக்செல்வனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

மேலும் 38 மீனவர்கள் விடுதலை- நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி

தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்னென்ன? எகிறும் எதிர்பார்ப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in