பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி

பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி
Updated on
1 min read

அரியானாவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தில் திடீரென தீ பற்றி எரிந்ததில் பேருந்தில் பயணம் செய்த 2 பேர் பலியான நிலையில், 14 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அரியானா மாநிலம் குர்கான்-ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் சாலையில் நேற்று இரவு 11.40 மணி அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் இன்ஜினிலிருந்து புகை வரத்துவங்கியது. பயணிகள் கீழே இறங்குவதற்குள் தீ மளமள வென பரவியது.

தீ பரவிய நிலையில் அதில் இருந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கினர். இந்த கோர விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 14 பேர் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in