தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்னென்ன? எகிறும் எதிர்பார்ப்பு!

தீபாவளி 2023 படங்கள்
தீபாவளி 2023 படங்கள்

தீபாவளி பண்டிகை என்றாலே பலருக்கும் பட்டாசும், படங்களும்தான் முதலில் நினைவுக்கு வரும். அந்த வகையில், தீபாவளி பண்டிகையை இன்னும் கொண்டாட்டமாக மாற்றும் வகையில் பல படங்கள் வரிசைக் கட்டி வெளியாகிறது. என்னென்ன படங்கள் வெளியாகிறது, அதுகுறித்து மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

‘ஜப்பான்’:

’ஜப்பான்’ திரைப்படத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல்
’ஜப்பான்’ திரைப்படத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல்

கார்த்தியின் 25வது படமாக உருவாகி இருக்கிறது ‘ஜப்பான்’. ‘பொன்னியின் செல்வன்’, ‘சர்தார்’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு ராஜூ முருகனுடன் கார்த்தி இந்தப் படத்திற்காக இணைந்திருக்கிறார். நடை, உடை, பாவனை என தனது முந்தையப் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறார் கார்த்தி. ரசிகர்களும் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளதாகப் பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த 2019ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படம் பெரும் வெற்றிப் பெற்றது. அதன் பிறகு இந்த தீபாவளிக்கு வெளியாகும் ‘ஜப்பான்’ கைக்கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

‘ஜிகர்தண்டா-டபுள் எக்ஸ்’:

'ஜிகர்தண்டா- டபுள் எக்ஸ்' படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ்
'ஜிகர்தண்டா- டபுள் எக்ஸ்' படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ்

சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா’. படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகமாக ‘ஜிகர்தண்டா-டபுள் எக்ஸ்’ இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. இதில் ராகவா லாரன்ஸ்-எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்கள்.

முதல் பாகத்தை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பீரியட் டிராமாவாக உருவாகியுள்ள இந்தப் படம் நாளை வெளியாக இருக்கிறது.

‘கிடா’:

'கிடா’ திரைப்படம்
'கிடா’ திரைப்படம்

சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் திரையிடப்பட்டு விருதுகளை வென்ற திரைப்படம் ‘கிடா’. வெங்கட் இயக்கத்தில் பூ ராமு, காளி வெங்கட் அட்டகாசமான நடிப்பைக் கொடுத்துள்ளனர். தீபாவளி வெளியிடாக வரும் இந்தப் படம் சிறப்பு திரையிடலில் பாராட்டுக்களைப் பெற்றது. நாளை திரையரங்குகளில் வெளியாகிறது ‘கிடா’.

‘ரெய்டு’: 

'ரெய்டு’
'ரெய்டு’

அறிமுக இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிப்பில் ஆக்‌ஷன் என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ‘ரெய்டு’. இயக்குநர் முத்தையா இந்தப் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். விக்ரம் பிரபுவின் ‘இறுகப்பற்று’ படத்தின் வரவேற்புக்குப் பிறகு இந்தப் படம் தீபாவளி வெளியீடாக வர இருக்கிறது.

’தி மார்வெல்ஸ்’: 

’தி மார்வெல்ஸ்’
’தி மார்வெல்ஸ்’

ஹாலிவுட் படப்பிரியர்களுக்கு இந்த தீபாவளி விருந்தாக வர இருக்கிறது ‘தி மார்வெல்ஸ்’. மார்வல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ளது ‘தி மார்வல்ஸ்’. நியா டகோஸ்டா இயக்கியுள்ள இப்படத்தில் ப்ரி லார்சன், டெயோனா பாரிஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

'டைகர்3’:

’டைகர்3’
’டைகர்3’

சல்மான்கான், கத்ரினா கைஃப் நடித்துள்ள படம் ‘டைகர் 3’. ‘யூஆர்எஃப் ஸ்பை யூனிவர்’ஸில் வரும் இப்படத்தை மணிஷ் ஷர்மா இயக்கியுள்ளார். இம்ரான் ஹாஷ்மி, ரித்தி டோக்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நாளை வெளியாகும் இந்தப் படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும், படம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே டிரெய்லரில் கத்ரீனாவின் குளியலறை சண்டைக் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in