அசோக்செல்வன் - கீர்த்தி பாண்டியன்
அசோக்செல்வன் - கீர்த்தி பாண்டியன்

ஹனிமூனில் அசோக்செல்வனுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

அசோக்செல்வன் - கீர்த்தி பாண்டியன் தம்பதி திருமணத்திற்குப் பிறகு ஹனிமூன் சென்றுள்ளனர். மேலும், அங்கு அசோக்செல்வனின் பிறந்தநாளும் சேர்ந்து கொள்ள அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் கீர்த்தி பாண்டியன்.

கடந்த செப்டம்பர் மாதம் நடிகர் அசோக்செல்வன்- நடிகை கீர்த்தி பாண்டியன் இருவருக்கும் திருநெல்வேலியில் பசுமையான சூழலில் வயலுக்கு மத்தியில் திருமணம் நடந்தது. திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், அசோக்செல்வன் - கீர்த்தி பாண்டியன் தம்பதி தற்போது ஹனிமூன் சென்றுள்ளனர். திருமணம் முடிந்ததும் அசோக் செல்வன் படங்களில் பிஸியாகி விட தற்போது இருவரும் ஜெர்மனிக்கு தேனிலவு சென்றுள்ளனர்.

அங்கு அசோக்செல்வனின் 35வது பிறந்தநாளும் சேர்ந்துகொள்ள தனது கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் கீர்த்தி. வானவில் பின்புறம் தெரிய அசோக்செல்வனுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘பிறந்தநாள் வாழ்த்துகள் ஹஸ்பண்ட்! நீ என் வாழ்வில் வந்தது மிகச்சிறந்த விஷயம். உன் சிரிப்பும் மகிழ்ச்சியும் எப்போதும் எங்களையும் சந்தோஷப்படுத்தும். லவ் யூ!’ எனக் கூறியுள்ளார். ரசிகர்களும் இந்த தம்பதிக்கு தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in