பிறந்தநாள் கொண்டாடும் ஹபிள் விண்வெளி தொலைநோக்கி... பேரண்டத்தின் பொக்கிஷங்களை பூமிக்கு பகிரும் தூதுவன்

ஹபிள் விண்வெளி தொலைநோக்கி
ஹபிள் விண்வெளி தொலைநோக்கி

ஹபிள் விண்வெளி தொலைநோக்கியின் 34வது பிறந்தநாளை உலகம் கொண்டாடி வருகிறது. பேரண்டத்தின் சிறப்புகளை படம் பிடித்து அனுப்புவதில் இத்தனை ஆண்டுகளாக அதன் பணி அளப்பரியது.

1990-ம் ஆண்டு இதே நாளில் ஹபிள் விண்வெளி தொலைநோக்கி புவியின் தாழ் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அன்று முதல் பல மில்லியன் புகைப்படங்களையும், தரவுகளையும் பூமிக்கு வாரி வழங்கி வருகிறது. அண்டசராசரத்தின் அதிசயங்களை அறிந்துகொள்வதில் தவிர்க்க முடியாத இடத்தை ஹபிள் பிடித்துள்ளது.

2010-ல் ஹபிள் அனுப்பிய கார்னியா நெபுலா புகைப்படம்
2010-ல் ஹபிள் அனுப்பிய கார்னியா நெபுலா புகைப்படம்

ஹபிள் விண்வெளி தொலைநோக்கியை ஏவுவதற்கு சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னரே அதற்கான விதை ஊன்றப்பட்டது. விண்வெளியை ஆராய்வதில் பூமியில் திறன் வாய்ந்த தொலைநோக்கிகள் ஏராளமாய் உள்ளன. ஆனபோதும், வளிமண்டல அடுக்குகளை தாண்டிவரும் ஒளியலைகள், அங்கு பரவிக் கிடக்கும் மாசுக்கள் உள்ளிட்டவை சிறப்பான படங்களை எடுப்பதில் தடையாக மாறின.

அதன் பின்னரே விண்வெளியில் ஒரு தொலைநோக்கியை நிலைநிறுத்துவதன் அவசியத்தை விஞ்ஞானிகள் உணர்ந்தனர். உண்மையில் ஹபிள் விண்வெளிதொலைநோக்கி என்பது, விண்வெளியை ஆராய அனுப்பப்பட்ட முதல் தொலைநோக்கி அல்ல; அதே போன்று கடைசிம் அல்ல. ஆனபோதும் இந்த 34 ஆண்டுகளில் ஹபிள் தொலைநோக்கி பூமிக்கு வழங்கிய தரவுகள், பேரண்டத்தின் ரகசியங்களை அறிந்துகொள்வதோடு, இந்த பூமியின் தோற்றத்தையும் அறிய உதவியது.

அண்டத்தின் பல மூலைகளையும் துழாவும் ஹபிள் லென்சுகள், ஒளியாண்டு முன்னர் நேரிட்ட நிகழ்வுகளையே இப்போது படம் பிடித்து அனுப்புகின்றன. இதனால் விண்வெளியை ஆராய்வதில், நாசா உள்ளிட்ட விண்வெளி ஆய்வு மையங்களுக்கு பொக்கிஷமான தரவுகள் கிடைத்து வருகின்றன. மேலும் ஹபிள் விண்வெளி தொலைநோக்கி தந்த அனுபவங்களின் அடிப்படையில், எதிர்காலத்துக்கான புதிய விண்வெளி தொலைநோக்கியை வடிவமைப்பதும் சாத்தியமாகி வருகிறது.

ஹபிள் விண்வெளி தொலைநோக்கி அனுப்பிய முதல் சுற்று படங்கள் அனைத்துமே, அதன் பாதிப்புற்ற லென்ஸ் காரணமாக பிழையாகவே பூமிக்கு வந்து சேர்ந்தன. இந்தப் பிழையை சரி செய்யவே நாசாவுக்கு சில ஆண்டுகள் ஆனது. ஆனபோதும் அந்த தொடக்கத் தடுமாற்றங்களை போக்கும் வகையில் அது அனுப்பும் படங்கள் அமைந்து வருகின்றன. 3000 கேலக்ஸிகளை உள்ளடக்கிய புகைப்படம், பால்வெளி மண்டலங்களின் மோதல் என ஹபிள் அனுப்பிய தரவுகள் விண்வெளியின் எதிர்கால ஆய்வுகளுக்கும் வரப்பிரசாதமாக அமையக் கூடியவை.

இதையும் வாசிக்கலாமே...


“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in