வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹமீதுல் ரஹ்மான்
திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹமீதுல் ரஹ்மான்
Updated on
1 min read

எதிர்க்கட்சித் தொண்டர்கள், வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த புகாரில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோப்ரா தொகுதி எம்எல்ஏ ஹமீதுல் ரஹ்மான், மேற்கு வங்க மாநிலம், உத்தர தினஜ்பூரில் இம்மாத துவக்கத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசினார்.

அதில், "மத்திய அரசின் படைகள் ஏப்ரல் 26ம் தேதி வரைதான் இங்கு இருக்கும். அதன் பிறகு நீங்கள் எங்கள் படைகளுடன் இருக்க வேண்டும். உங்கள் பொன்னான வாக்குகளை வீணாக்காதீர்கள்.

மத்தியப் படைகள் ஏப்ரல் 26-ம் தேதி இந்த இடத்தை விட்டு வெளியேறும். அப்போது நமது மத்திய படைகள் மட்டுமே இங்கு இருக்கும்” என பேசியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஏப்ரல் 11ம் தேதி எக்ஸ் தளத்தில் சுவேந்து அதிகாரியின் வீடியோ பதிவு மூலம் எங்களுக்கு புகார் வந்தது. பொதுக் கூட்டத்தில் பேசுகையில் எம்எல்ஏ ஹமீதுல் ரஹ்மான், வாக்காளர்களையும், எதிர்க்கட்சித் தொண்டர்களையும் அச்சுறுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

விசாரணையில் அவரது பேச்சு தேர்தல் நடத்தை விதிகள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 மற்றும் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளை மீறியது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த விதிமீறல் குறித்து வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in