“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்துக் குறித்து பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ’பிறரது தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்து பொதுவில் இவர் ஏன் விமர்சிக்க வேண்டும்?’ எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் தங்கள் பிரிவை அறிவித்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ரஜினி தரப்பு இருவரையும் சேர்த்து வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அது பலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கையில் இவர்களது விவாகரத்து விஷயத்தை சர்ச்சைப் பேச்சுகளுக்கு சொந்தக்காரரான பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் இந்தியா க்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதைக் கேட்ட நெட்டிசன்கள், ’பிறரது திருமண வாழ்க்கை பற்றி பொதுவில் இவர் ஏன் பேச வேண்டும்? பப்ளிசிட்டிக்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா?’ எனத் திட்டி தீர்த்து வருகின்றனர்.

அந்த பேட்டியில், ”ரஜினிகாந்த், அஜித் போன்ற பெரிய நடிகர்களே சினிமா பிறகு, குடும்பம் தான் பர்ஸ்ட் என குடும்பத்தை நன்றாக கவனித்து வருகின்றனர். அவர்களது படம் பிடித்தால் தியேட்டரில் போய் படம் பார்ப்பதோடு ரசிகர்கள் நிறுத்தி விடுங்கள். அவர்களை தெய்வமாக பார்க்க வேண்டாம்” என்று பேசினார்.

தனுஷ் -ஐஸ்வர்யா
தனுஷ் -ஐஸ்வர்யா

பிறகு தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரத்தை கையில் எடுத்துப் பேசினார். அதில், “தனுஷிடம் இந்த விஷயத்தை நேரடியாகவே கேட்கிறேன். பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை வாழ வேண்டும்? ’தனுஷ் எல்லாம் ஒரு மனுஷனா? ஐஸ்வர்யா எல்லாம் ஒரு பொம்பளையா?’ எனப் பிறர் சொல்லும் அளவுக்கு ஏன் வாழ வேண்டும்?

உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கூட நீங்கள் யோசிக்கவில்லையா? அவர்களுக்காக சேர்ந்து வாழுங்கள்” என்று விளாசியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in