தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தலைவர் 170 திரைப்படத்தில் ரஜினிகாந்த்; உடன் இயக்குநர் த.செ.ஞானவேல்
தலைவர் 170 திரைப்படத்தில் ரஜினிகாந்த்; உடன் இயக்குநர் த.செ.ஞானவேல்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே முடிவடைந்து விடும் என முன்பு படக்குழு அறிவித்து இருந்த நிலையில், இப்போது வரை படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், இயக்குநர் ஞானவேல் மீது ரஜினிகாந்த் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ படத்தி நடித்து வருகிறார். அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில் என பல நடிகர்கள் இதில் நடிக்கின்றனர். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கடந்த மார்ச் மாதமே இதன் படப்பிடிப்பு முடிந்து விடும் என படக்குழு தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், அக்டோபர் மாதம் ரிலீஸ் என அறிவித்தப் பின்பும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

இப்போது மே 15க்கு மேல் தான் படத்தின் ஷூட்டிங் முடியும் நிலையில் இருக்கிறதாம். ரஜினிக்கான படப்பிடிப்புகள் அனைத்தும் படமாக்கப்பட்ட நிலையில், இன்னும் சில நாட்கள் அவரிடம் இயக்குநர் ஞானவேல் கால்ஷீட் கேட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், இயக்குநர் மீது ரஜினி அப்செட் என்கிறார்கள்.

‘கூலி’ படத்திற்கான புரோமோ ஷூட், அந்தப் படத்திற்கான கெட்டப் என ரஜினிகாந்த் தயாராகி வரும் சமயத்தில் ஞானவேல் கால்ஷீட் கேட்டிருக்கிறார். இந்த தாமதத்தால் இந்த மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பும் தள்ளிப் போகியுள்ளது.

’கூலி’ ரஜினிகாந்த்
’கூலி’ ரஜினிகாந்த்

’வேட்டையன்’ படப்பிடிப்பு முடிந்த கையோடு மே மாத இறுதியிலோ அல்லது ஜூன் மாதத்திலோ தான் ‘கூலி’ படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.

இதையும் வாசிக்கலாமே...


'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in