கேரளாவில் வயலில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள்
கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள்

கண்ணூர் மாவட்டம், மட்டன்னூரில் 9 அதிபயங்கர வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிகுண்டுகளை தேர்தல் நேரத்தில் தாக்குவதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தயாரித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் 9 வெடிகுண்டுகள் கிடப்பதை இன்று காலை பொதுமக்கள் பார்த்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், போலீஸார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வயலில் வாளியில் வைக்கப்பட்டிருந்த 9 இரும்பு வெடிகுண்டுகளையும் கைப்பற்றினர்.

அதிபயஙகர விளைவை ஏற்படும் 9 இரும்பு வெடிகுண்டுகளையும் செயலிழக்கச் செய்யும் பணியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த மக்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். இதன்பின் மிகக்கவனமாக 9 இரும்பு வெடிகுண்டுகளையும் அவர்கள் செயலிழக்கச் செய்தனர்.

தனியார் வயலில் எப்படி இந்த வெடிகுண்டுகள் வந்தன என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சங்பரிவார் தலைமையிலான நூலகம் அருகே இந்த அதிபயங்கர வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த வெடிகுண்டுகளை ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள, மக்களவைத் தேர்தல் சூழலில் தாக்குவதற்காக தயாரித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை இதுவரை காவல் துறை உறுதிப்படுத்தவில்லை.

இந்த வெடிகுண்டுகள் சமீபத்தில் தயாரிக்கப்பட்டவை என்பது போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த வெடிகுண்டுகளைத் தயாரித்தனர், யார் அவர்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வயல் பகுதியில் அதிபயங்கரமான வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் கண்ணூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in