நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

அஜித்- ஷாலினி
அஜித்- ஷாலினி

நடிகர்கள் அஜித்- ஷாலினி ஜோடி தங்களின் 24-ம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டத்திற்காக நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு ரசிகர்களுடன் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதி ஷாலினி - அஜித் ஜோடி. இவர்களுக்கு காதல் திருமணம் நடந்து 24 வருடங்கள் ஆகிறது. 24-ம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டத்திற்காக இருவரும் இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த ரசிகர்கள் அஜித் - ஷாலினிக்கு தங்கள் வாழ்த்துகளைச் சொல்லி புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இந்த வீடியோவும் இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.

சரண் இயக்கத்தில் வெளியான ‘அமர்க்களம்’ படத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தபோது நட்பு காதலானது. பின்பு, பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகளும் உண்டு.

திருமணத்திற்குப் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் சினிமாவில் நடிப்பதை மட்டும் செய்து வருகிறார் அஜித். மகன் ஆத்விக் ஃபுட்பால் விளையாட்டில் சிறந்து விளங்க அவருக்கு ஊக்கம் கொடுத்து வருகிறது இந்த தம்பதி.

குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை ஷாலினியும் அவ்வப்போது தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்வதுண்டு. அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...


'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in