துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைவசம் வைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த சீசனில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்த சீசனில் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலக்கப்பட்டு, ருதுராஜ் கெய்க்வாட் அந்த பொறுப்புக்கு வந்தார். இந்த சூழலில்தான் சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்விகளை எதிர்கொண்டு வருகிறது.

நேற்று நடந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்தது. இதுவரை சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வி உட்பட 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இதனால் பிளே ஆஃப் சுற்றில் சிஎஸ்கே அணி கால் பதிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சீசனில் சென்னை அணி இன்னும் 6 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளது. அதேபோல் பஞ்சாப், குஜராத் மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகளுக்கு எதிராக வெளி மாநிலங்களில் விளையாடவுள்ளது. இதில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு எதிராக கடந்த சீசனிலேயே சிஎஸ்கே சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது. எனவே இம்முறை அந்த அணிகளை நிச்சயம் தோற்கடிக்கவேண்டும். மேலும் இந்த சீசனில் பெரும் ஜாம்பவானாக உருவெடுத்துள்ள ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டும்.மேலும் பஞ்சாப் அணிக்கு எதிராக தரம்சாலா மைதானத்திலும் சிஎஸ்கே அணி வெற்றிபெறவேண்டும்.

சென்னை அணி கேட்டன் ருதுராஜ் உடன் தோனி
சென்னை அணி கேட்டன் ருதுராஜ் உடன் தோனி

குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது அத்தனை எளிதான விஷயமல்ல. எனவே மேற்சொன்ன 4 போட்டிகளில் வென்றால் சிஎஸ்கே அணியால் பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்க முடியும். ஆனால் புள்ளிப்பட்டியலில் டாப்பில் இருக்கும் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தால் சென்னை அணியின் பிளே ஆஃப் கனவு தவிடுபொடியாகும். எனவே இனிவரும் 6 போட்டிகளும் சென்னை அணிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in