தெறிக்கவிட்ட விராட் கோலி; இந்த ஐபிஎல் தொடரில் முதல் சதம்... ராஜஸ்தான் அணியை துவம்சம் செய்த பெங்களூரு!

விராட் கோலி
விராட் கோலி

ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் முதல்முறையாக சதம் விளாசி அசத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி இன்று விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் டூ பிளசிஸ் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார்கள். 33 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுத்த டூபிளசிஸ் சஹல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல், பர்கர் பந்தில் 1 ரன்னில் அவுட்டானார்.

ராஜஸ்தான் பெங்களூரு
ராஜஸ்தான் பெங்களூரு

ஆனாலும் மறுமுனையில் அதிரடி காட்டினார். பவர் பிளே ஓவர்களில் 25 பந்துகளில் 32 ரன்களை சேர்த்த விராட் கோலி, அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதன் மூலமாக 39 பந்துகளில் சிக்சர் அடித்து அரைசதத்தை எட்டினார். 20 ஓவர் வரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 12 பவுண்டரிகள், 4 சிக்சருடன் 113 ரன்கள் எடுத்திருந்தார். இந்த ஐபிஎல் தொடரில் முதல் சதம் அடிக்கும் வீரர் கோலிதான். கோலியின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை பெங்களூரு அணி எடுத்துள்ளது.

கோலி
கோலி

ஜெய்ப்பூர் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுவதால் விராட் கோலி ரசிகர்களுக்கு ஒரு பதற்றம் இருந்தது. ஏனென்றால் 17 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் விராட் கோலி ஜெய்ப்பூர் மைதானத்தில் ஒருமுறை கூட அரைசதம் அடித்ததில்லை. ஆனால் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக கோலி இன்று சதம் அடித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கோலி எடுக்கும் 8வது சதம் இதுவாகும்.

இதையும் வாசிக்கலாமே...   

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவு... தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வங்கிக் கணக்கு முடக்கம்... வருமான வரித்துறையின் அடுத்த அதிரடி!

கோவையில் ரூ.3.54 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்... தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியது!

கிளம்பிட்டாரு நவரச நாயகன் கார்த்திக்... அதிமுகவுக்கு ஆதரவாக தென் மாவட்டங்களில் பிரச்சாரமாம்!

11 வயதில் வீட்டை விட்டு அனுப்பி வைத்தார்கள்...மனம் உடைந்த பிரபல நடிகர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in