மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வங்கிக் கணக்கு முடக்கம்... வருமான வரித்துறையின் அடுத்த அதிரடி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வங்கிக் கணக்கு முடக்கம்... வருமான வரித்துறையின் அடுத்த அதிரடி!

காங்கிரஸைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  வங்கிக் கணக்கையும் வருமானவரித்துறை தற்போது முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள  நிலையில் ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு, தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றைக் கொண்டு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் மற்றும் முடக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

அதற்கு ஏற்றார்போலவே இந்த துறைகளின் சார்பில் பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் மீதும், அவற்றின் தலைவர்களின் மீதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் சிபுசோரன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதும், செந்தில்பாலாஜி,  கவிதா உட்பட எதிர்க்கட்சி பிரமுகர்களின் மீது அமலாக்கத் துறையினர் நடவடிக்கைகள் பாய்வதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

வருமான வரித்துறை
வருமான வரித்துறை

இந்த நிலையில் அண்மையில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டது.  மேலும் சுமார் 3000 கோடிக்கு மேல் அபராதம் மற்றும் வரியாக காங்கிரஸ் கட்சி செலுத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்  தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கிக் கணக்கையும் வருமானவரித்துறை முடக்கியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பொதுத்துறை வங்கியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து அண்மையில் ஒரு கோடி ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது. அதனை அக்கட்சி கணக்கு தாக்கலின்போது குறிப்பிடவில்லை எனக்கூறி அந்த வங்கிக்கணக்கை வருமானவரித்துறை தற்போது முடக்கியுள்ளது. அந்த கணக்கில் 4.8 கோடி ரூபாய் பணம் இருப்பு உள்ள நிலையில் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் செலவுகளுக்கு சிக்கலில் உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   

ஓசூரில் பரபரப்பு... வாகன தணிக்கையில் ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் சிக்கியது!

குண்டு கட்டாகத் தூக்கிச் சென்று வேலூர் இப்ராஹிம் கைது... அனுமதியின்றி பிரசாரம் செய்ததால் அதிரடி!

நான்கு பேரால் அக்கா, தங்கை கூட்டுப் பலாத்காரம்... காதலர்களைக் கட்டிப்போட்டு விடிய, விடிய நடந்த கொடூரம்!

மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு...ஏப்ரல் 26-ம் தேதி பரபரப்பு தீர்ப்பு!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு வழக்கு... என்ஐஏ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in