கிளம்பிட்டாரு நவரச நாயகன் கார்த்திக்... அதிமுகவுக்கு ஆதரவாக தென் மாவட்டங்களில் பிரச்சாரமாம்!

கார்த்திக்
கார்த்திக்

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரமும் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்திக்
நடிகர் கார்த்திக்

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக  இருந்த கார்த்திக், 2006-ல்  ஆண்டில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். ஃபார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்து செயலாற்ற தொடங்கினார். அங்கே செல்லுபடி ஆகாததால் 2009-ல் அக்கட்சியில் இருந்து விலகி ’நாடாளும் மக்கள் கட்சி’ என்ற பெயரில் தனி கட்சி தொடங் கினார். ஆனால், தொட்டது எதுவுமே அவருக்கு துலங்கவில்லை.

இதனால் தனக்குத்தானே குழம்பிப் போன கார்த்திக், தனது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டே இருந்தார். திடீரென காங்கிரஸ் தலைவர்களைப் புகழ்ந்தார். இவரை நம்பி இவருடன் கூட்டணி பேசிய கட்சிகளும் கடைசியில் நாக்கைக் கடித்துக்கொண்டன. எந்நேரமும் ம்கையில் இரண்டு செல்போன்களை வைத்துக்கொண்டு கேம் ஆடிக் களைத்துக் போகும் கார்த்தி எப்போது எழுந்திருப்பார் எப்போது தூங்குவார் என்பது கட்சிக்காரர்களுக்கே தெரியாத ரகசியமாகிப் போனது.

இரண்டு போன் கையில் இருந்தாலும் யார் அழைத்தாலும் அத்தனை சீக்கிரம் எடுக்கமாட்டார் கார்த்திக். குறிப்பாக, பகலில் அவரை தொடர்புகொள்வதே குதிரைக் கொம்பாகிவிடும். விருதுநகர் அவருக்கு சொந்தமாவட்டம் என்பதால் கார்த்திக்கு அங்கே தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. அதனால் அங்கிருக்கும் கார்த்திக் விசுவாசிகள் அவருக்காக பிரம்மாண்ட நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் ஏற்பாடு செய்த வரலாறுகளும் உண்டு. ஆனால், கார்த்தியின் ’விளையாட்டு’த்தனத்தால் பல நேரங்களில் அந்த நிகழ்ச்சிகள் ரத்தாகிப் போனதால் ரசிகர்களும் ஆதரவாளர்களும் சோர்வாகிப் போனார்கள். பேட்டிக்காக காக்கவைத்து காக்கவைத்து பத்திரிகையாளர்களையும் டயர்ட் ஆக்கிய சாமர்த்தியமும் கார்த்திக்கிற்கு உண்டு.

இதனால் சொந்த மாவட்டத்திலேயே கார்த்திக்கு செல்வாக்கு சரியத் தொடங்கியது. ஆனால், இதையெல்லாம் உணராமல் தன்னைப் பற்றி மிதமிஞ்சிய கற்பனையில் மிதந்தார் கார்த்திக். இதனால் தமிழகத்திலுள்ள பிரதான அரசியல் கட்சிகள், ஹீரோவான அவரை ஜோக்கர் கணக்காய் டீல்பண்ண ஆரம்பித்தன. அதேசமயம், தேர்தல் சமயத்தில் மட்டும் முற்போக்கான கருத்துக்களைப் பேசி அரசியல் களத்துக்கு வரும் கார்த்திக் அதன் பிறகு அரசியல் தலைமறைவு ஆகிவிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.  

அவரின் அப்பாவித்தனத்தை தங்களுக்குச் சாதமாக்கிக் கொண்டு கட்சிக்குள் இருந்த சிலர் கண்டபடி கல்லாக்கட்ட ஆரம்பித்தார்கள். விஷயம் தெரிந்து அச்சச்சோ என்று பதறிய கார்த்திக், மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்திய கதையாக தனது நாடாளும் மக்கள் கட்சியையே அடியோடு கலைத்தார்.

அதன்பிறகு சினிமா தயாரிப்பில் இறங்கப் போவதாகச் சொல்லி லொக்கேஷன் பார்க்க மாமியார் ஊரான ஊட்டிப் பக்கம் கிளம்பிய நவரச நாயகனுக்கு மீண்டும் அரசியல் ஆசை துளிர்த்தது. கொஞ்சமும் யோசிக்காமல் 2018-ல் மனித உரிமை காக்கும் கட்சி என்ற பெயரில் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபட்டார். ஆனால், இந்தமுறை அவரை யாரும் அத்தனை ஆர்வமாய் தேடவில்லை. அதனால் ஆரவாரம் இல்லாமல் இருந்து வந்த அவர் இப்போது மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறார்.

நடிகர் கார்த்திக்
நடிகர் கார்த்திக்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கார்த்திக், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 9-ம் தேதி முதல் 8 நாட்களுக்கு தமிழகம் முழுமைக்கும் பிரச்சாரம் போகப் போகிறாராம். முக்குலத்தோர் மக்கள் அதிகம் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக கூட்டணிக்காக தீவிர(!) பிரச்சாரம் செய்யப் போகிறாராம் கார்த்திக்.

ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனா, சொன்னபடி சொன்ன நேரத்துக்கு சொன்ன இடத்துக்கு கார்த்திக் பிராச்சாரத்துக்கு வந்தாகவேண்டுமே!

இதையும் வாசிக்கலாமே...   


ஓசூரில் பரபரப்பு... வாகன தணிக்கையில் ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் சிக்கியது!

குண்டு கட்டாகத் தூக்கிச் சென்று வேலூர் இப்ராஹிம் கைது... அனுமதியின்றி பிரசாரம் செய்ததால் அதிரடி!

நான்கு பேரால் அக்கா, தங்கை கூட்டுப் பலாத்காரம்... காதலர்களைக் கட்டிப்போட்டு விடிய, விடிய நடந்த கொடூரம்!

மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு...ஏப்ரல் 26-ம் தேதி பரபரப்பு தீர்ப்பு!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு வழக்கு... என்ஐஏ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in