போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவு... தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆசிரியர்கள் போராட்டம்
ஆசிரியர்கள் போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்ய மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தேர்தலில்  திமுகவுக்கு  எதிரான சூழலை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

ஆசிரியர்கள் போராட்டம்
ஆசிரியர்கள் போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்.19, 2024 முதல் மார்ச் 8, 2024 வரை இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்காத நிலையில் இதில் கலந்து கொள்கிறவர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று அப்போது அரசு அறிவித்திருந்தது. ஆனாலும் அதையும் மீறி ஆசிரியர்கள் 19 நாட்கள் விடாது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அரசு முன்னரே எச்சரித்திருந்தபடி  போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்து உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்தம் செய்ய அந்த பகுதி கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

போராட்டம்
போராட்டம்

அதில், "போராட்டத்தில் கலந்து கொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். 19 நாள்களுக்கு உரிய ஊதியம், பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்ய வேண்டும்' என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பல்வேறு சலுகைகளை ரத்து செய்துள்ளதை கண்டித்து போராட்டம் நடத்திய நிலையில் தற்போது போராடிய நாட்களுக்கு ஊதியத்தையும் பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் மத்தியில் திமுக அரசின் மீது அதிருப்தி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தேர்தலிலும் ஒலிக்கும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...   


ஓசூரில் பரபரப்பு... வாகன தணிக்கையில் ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் சிக்கியது!

குண்டு கட்டாகத் தூக்கிச் சென்று வேலூர் இப்ராஹிம் கைது... அனுமதியின்றி பிரசாரம் செய்ததால் அதிரடி!

நான்கு பேரால் அக்கா, தங்கை கூட்டுப் பலாத்காரம்... காதலர்களைக் கட்டிப்போட்டு விடிய, விடிய நடந்த கொடூரம்!

மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு...ஏப்ரல் 26-ம் தேதி பரபரப்பு தீர்ப்பு!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு வழக்கு... என்ஐஏ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in