முகமது ஷமியை திருமணம் செய்துக்கொள்வேன் - விருப்பம் தெரிவித்தார் பிரபல நடிகை!

முகமது ஷமி பாயல் கோஷ்
முகமது ஷமி பாயல் கோஷ்

நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமாக பந்துவீசி அசத்திக் கொண்டிருக்கிறார் முகமது ஷமி. அவருக்கு இப்போது திருமண வாய்ப்பு தேடி வந்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகையான பாயல் கோஷ் வெளிப்படையாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது ஷமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள நான் தயார், ஆனால் ஒரு கண்டிஷன் என தெரிவித்துள்ளார். அது என்ன கண்டிஷன் என்றால் முகமது ஷமி தன்னுடைய ஆங்கில புலமையை மேம்படுத்த வேண்டும், அதற்கு ஓகே சொன்னால் உலக கோப்பைக்குப் பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என பிரபல பாலிவுட் நடிகையான பாயல் கோஷ் கூறியிருக்கிறார்.

பாயல் கோஷ் 31 வயதான நடிகை ஆவார். பிராயணம் (தெலுங்கு) படத்தில் நடித்து பிரபலமானார். அதற்கு முன்பு ஷார்ப்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 2009ம் ஆண்டு வெளியான இப்படத்தில் மஞ்சு மனோஜ் நாயகனாக நடித்திருந்தார். பின்னர் தெலுங்கில் ஓசரவெள்ளி என்ற படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்தார். பாலிவுட் பக்கம் திரும்புவதற்கு முன்பு மிஸ்டர் ராஸ்கல் (தெலுங்கு) படத்திலும் நடித்தார். நடிகை பாயல் கோஷ் சாத் நிபானா சாதியா என்ற ஹிட் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தோன்றியுள்ளார்.

அண்மைக்காலமாக மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்த அவர் அதற்காக பிரத்யேகமாக சிகிச்சை எடுத்துக் கொண்டார். தான் பல்வேறு நபர்களால் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு உடல் எடை கூடிவிட்டதாக கூறியிருந்தார். அதற்காக பிரத்யேகமாக சிகிச்சை எடுத்துக் கொண்டு இப்போது பழைய நிலைக்கு திரும்பி வந்திருப்பதாகவும் நடிகை பாயல் கோஷ் தெரிவித்துள்ளார். மீண்டும் பழையபடி சினிமாக்களில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முகமது ஷமி முன்பு ஹசின் ஜஹானை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணம் 2014ம் ஆண்டு நடந்தது. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இருவருக்கும் இடையிலான திருமண விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முகமது ஷமி மற்றும் ஹசின் ஜஹானுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in