சிறப்பான சம்பவம் செய்த சென்னை பவுலர்கள்... 137 ரன்களில் சுருண்டது கொல்கத்தா அணி!

ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா

இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சில் சிக்கி கொல்கத்தா அணி சின்னாபின்னமானது. கொல்கத்தா 137 ரன்களை மட்டுமே குவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி, சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. அதனால், கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

சென்னை கொல்கத்தா
சென்னை கொல்கத்தா

கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். ஆரம்பமே அதிர்ச்சியாக ஆட்டத்தின் முதல் பந்திலேயே சால்ட் அவுட்டானார், துஷார் தேஷ்பாண்டே இந்த மிரட்டலான விக்கெட்டை எடுத்தார். அடுத்ததாக அங்ரிஷ் ரகுவான்சி களமிறங்கினார். முதல் பந்தே விக்கெட் விழுந்ததை தொடர்ந்து கொல்கத்தா வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். ஆனால் 6வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா, 24 ரன்கள் எடுத்திருந்த ரகுவான்சியை அவுட்டாக்கினார். அதே ஓவரில் நரைனும் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சென்னை அணி
சென்னை அணி

அடுத்ததாக களமிறங்கிய கேப்டனும் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். ஆனாலும் அடுத்தடுத்து வெங்கடேஷ் ஐயர் 3 ரன்கள், ரமந்தீப் சிங் 13 ரன்கள், ரிங்கு சிங் 9 ரன்கள், ரஸ்ஸல் 10 ரன்கள் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்ரேயாஸ் ஐயரும் 32 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் தேஷ்பாண்டே தலா 3 விக்கெட்டுகளையும், முஸ்தபிசூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...   

பிரச்சாரத்தில் நடிகை காஜலுக்கு திடீர் மாரடைப்பு... மருத்துவமனையில் அனுமதி!

காதலனை நம்பி சென்ற கல்லூரி மாணவி கொலை... பணத்திற்காக நடந்த கொடூரம்!

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு... இடைத் தேர்தல் எப்போது?

ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த நபர் உயிருக்குப் போராட்டம்!

கையில் சூலம்... காலில் சலங்கை... மிரட்டும் அல்லு அர்ஜூன்... தெறிக்குது ’புஷ்பா2’ டீசர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in