காதலனை நம்பி சென்ற பொறியியல் கல்லூரி மாணவி கொலை... பணத்திற்காக நடந்த கொடூரம்!

காதலனை நம்பி சென்ற பொறியியல் கல்லூரி மாணவி கொலை... பணத்திற்காக நடந்த கொடூரம்!

பணத்திற்காக பொறியியல் கல்லூரி மாணவியை கடத்தி கழுத்தை நெரித்துக் கொலை செய்த அவரது காதலர் உள்பட மூன்று நண்பர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையை ஏற்படுத்தியுள்ளது.

புணே ரயில் நிலையம்
புணே ரயில் நிலையம்

மகாராஷ்டிரா மாநிலம், புணேவின் வாகோலியைச் சேர்ந்தவர் 22 வயது பொறியியல் கல்லூரி மாணவி. அவர் கடந்த 30-ம் தேதி காணாமல் போனார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது காதலன் உள்பட மூன்று நண்பர்களால் அவர் டத்தப்பட்டது தெரிய வந்தது. இந்த நிலையில், அகமது நகரில் அந்த மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பினர். அப்போது அந்த மாணவி கழுத்தை நெரித்துக் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

இதன் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போது, பணத்திற்காக மாணவி கடத்திக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. வாகோலியைச் சேர்ந்த கல்லூரி மாணவியை அவரது காதலர் உள்பட மூன்று பேர் சந்தித்துள்ளனர். மார்ச் 30-ம் தேதி அவரை அகமது நகருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் கடத்தியது தெரியாமல் மாணவியும் அவர்களுடன் சென்றுள்ளனர்.

அங்கிருந்து மாணவியின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு 9 லட்ச ரூபாய் கேட்டு அவர்கள் மிரட்டியுள்ளனர். திடீரென ரூ.9 லட்சம் கேட்டதால், அந்த பணத்தைத் தயார் செய்ய முடியாமல் மாணவியின் பெற்றோர் திண்டாடியுள்ளனர். பணம் கிடைக்க தாமதம் ஏற்பட்டதால், இனி பணம் கிடைக்காது என்று அவர்கள் முடிவு செய்தனர்.

அத்துடன் மாணவியை விட்டு விட்டால், அவரது பெற்றோர் இந்த விஷயத்தை வெளியே சொல்லி விடுவார்கள் என்று மாணவியின் கழுததை நெரித்துக் கொன்றுள்ளனர். இதன் பின் அவரது உடலை அகமதுநகரின் புறநகர்ப் பகுதியில் வீசியுள்ளனர். அத்துடன். செல்போனில் இருந்த சிம்கார்டை கழற்றி வீசியுள்ளனர். மாணவி பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் விசாரணை நடத்திய போது இந்த விஷயங்கள் வெளியே தெரிய வந்தன. இதையடுத்து மாணவியின் காதலன் உள்பட மூன்று மாணவர்களை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

பணத்திற்காக தங்களுடன் படித்த சக மாணவியைக் கடத்தி மாணவர்களே கொலை செய்த சம்பவம் புணேவில் அதிர்ர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   


இன்று ஆண்டின் முதல் சூரிய கிரகணம்... என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?

டக்கென காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசனின் மகன்... ஜெர்க்கான அமைச்சர் பெரியசாமி!

மு.க.ஸ்டாலின் இதைச் செய்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

புதிய உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை... ஒரு சவரன் ரூ.53,280!

பாஜகவில் போட்டியிடும் 417 வேட்பாளர்களில் 116 பேர் மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்கள்... அதிர்ச்சி தகவல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in