கையில் சூலம்... காலில் சலங்கை... மிரட்டும் அல்லு அர்ஜூன்... தெறிக்குது ’புஷ்பா2’ டீசர்!

’புஷ்பா2’ டீசரில் அல்லு அர்ஜூன்...
’புஷ்பா2’ டீசரில் அல்லு அர்ஜூன்...

இன்று நடிகர் அல்லு அர்ஜூனின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் ‘புஷ்பா2’ டீசரை வெளியிட்டு குஷிப்படுத்தியுள்ளது படக்குழு. காலில் சலங்கைக்கட்டி தெறிக்கவிடும் அல்லு அர்ஜீனின் மாஸ் ஓபனிங் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

2021ல் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ படம் ரசிகர்களிடையே தெறி ஹிட். படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே பாடல்களை மொழி பேதமில்லாமல் நாடு முழுவதும் ரசித்தார்கள். கடந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றது. தெலுங்குத் திரையுலகில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறும் முதல் நடிகராக வரலாற்றில் தடம் பதித்தார் அல்லு அர்ஜூன். இதன் இரண்டாம் பாகம் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் அல்லு அர்ஜூன் பிறந்தநாள் ட்ரீட்டாக படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

புஷ்பா ராஜை இரண்டாம் பாகத்தில் அறிமுகப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது டீசர். காலில் சலங்கையுடனும் ரத்தம் தோய்ந்த பாதங்களுடனும் சங்கு ஊதியபடியே, கையில் சூலம் ஏந்தி, நீல நிற புடவையுடன் வதம் செய்யும் ஆக்ரோஷமான புஷ்பாவை இதில் பார்க்க முடிகிறது.

தெலங்கானா மாநிலத்தில் கொண்டாடப்படும் இந்து பழங்குடியின பெண் தெய்வங்களைப் போற்றும் திருவிழாவான சம்மக்கா சாரலம்மா ஜாதரா திருவிழாவை ஒட்டி இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் இந்த 4 நாட்கள் திருவிழாவிற்கு வருகை தருகின்றனர். சண்டைக்காட்சி, மகிஷாசுரவர்த்தினி என ஒலிக்கும் பின்னணி இசை என வெள்ளியான ஒரு நிமிட டீசரிலேயே புஷ்பா கதாபாத்திரத்திற்கான மாஸுடன் காட்சிக்கு காட்சி கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

’புஷ்பா2: தி ரூல்’ படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே படத்தின் போஸ்டர், கிளிம்ப்ஸ் போன்றவை முந்தைய பாகத்தை விட பிரம்மாண்டமாக இருக்கிறது என்பதையே உணர்த்தியது. முதல் பாகத்தில் வில்லனாக, நடிகர் பஹத் பாசிலில் கதாபாத்திரம் கிளைமாக்ஸில் வரும். ஆனால், இரண்டாம் பாகத்தில் அவருக்கான ஸ்கிரீன் ஸ்பேஸ் அதிகம் இருக்கும் என்பதைப் படக்குழு அறிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாது, முதல் பாகத்தில் சமந்தாவின் ‘ஊ சொல்றியா...’ பாடலும் ரசிகர்கள் மத்தியில் அதிரிபுதிரி ஹிட். இந்த பாகத்தில் சமந்தாவுக்கு பதில் நடிகை ஸ்ரீலீலா நடனம் ஆடுவார் எனத் தெரிகிறது. ட்ரெய்லர் பார்த்து குஷியில் உள்ள ரசிகர்கள் அல்லு அர்ஜூனுக்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...   


இன்று ஆண்டின் முதல் சூரிய கிரகணம்... என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?

டக்கென காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசனின் மகன்... ஜெர்க்கான அமைச்சர் பெரியசாமி!

மு.க.ஸ்டாலின் இதைச் செய்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

புதிய உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை... ஒரு சவரன் ரூ.53,280!

பாஜகவில் போட்டியிடும் 417 வேட்பாளர்களில் 116 பேர் மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்கள்... அதிர்ச்சி தகவல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in