பிரச்சாரத்தில் நடிகை காஜலுக்கு திடீர் மாரடைப்பு... மருத்துவமனையில் அனுமதி!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை காஜல் நிஷாத்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை காஜல் நிஷாத்

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் மக்களவைத் தொகுதி சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளரான நடிகை காஜல் நிஷாத், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் நடிகை காஜல் நிஷாத்
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் நடிகை காஜல் நிஷாத்

பிரபல போஜ்புரி நடிகையும், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மக்களவைத் தொகுதியின் சமாஜ்வாடி கட்சி வேட்பாளருமான காஜல் நிஷாத். இவர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு பொது நிகழ்ச்சியில் திடீரென மயங்கி விழுந்தார். பின்னர், கோரக்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் காஜல் நிஷாத்துக்கு உடலில் நீரிழப்பு ஏற்பட்டதைக் கண்டறிந்தனர். பின்னர், சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று மாலை, காஜல் நிஷாத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இதையடுத்து அவருக்கு ஈசிஜி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மாரடைப்பு அறிகுறி இருப்பதை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து காஜல் நிஷாத் உடனடியாக லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஜல் நிஷாத் 'லாபடகஞ்ச்' உள்பட பல்வேறு டிவி தொடர்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2012-ம் ஆண்டில் கோரக்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு அரசியலுக்குள் நுழைந்தார். தொடக்க காலப் பின்னடைவுகள் இருந்தாலும் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். இந்த முறை, அவர் சமாஜ்வாடி கட்சி சார்பில் கோரக்பூர் தொகுதியில், பாஜக எம்.பி-யும் நடிகருமான ரவி கிஷனை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இந்நிலையில் நடிகை காஜல் நிஷாத், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் சமாஜ்வாடி கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...   


இன்று ஆண்டின் முதல் சூரிய கிரகணம்... என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?

டக்கென காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசனின் மகன்... ஜெர்க்கான அமைச்சர் பெரியசாமி!

மு.க.ஸ்டாலின் இதைச் செய்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

புதிய உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை... ஒரு சவரன் ரூ.53,280!

பாஜகவில் போட்டியிடும் 417 வேட்பாளர்களில் 116 பேர் மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்கள்... அதிர்ச்சி தகவல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in