கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டி... டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது சிஎஸ்கே!

சென்னை - கொல்கத்தா அணிகள் மோதல்
சென்னை - கொல்கத்தா அணிகள் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. அதனால், கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

ஐபிஎல்  கிரிக்கெட் போட்டி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி

17வது ஐபில் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி, சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இன்று நடக்கிறது. முன்னதாக, இந்தப் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை கடந்த 5ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி, சில மணிநேரத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தது.

ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றி, 2 தோல்வியை அடைந்துள்ளது. கடைசியாக விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த போட்டியில் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் வகையில் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ள கொல்கத்தா அணி, நான்காவது வெற்றியை பதிவு செய்வதற்காக தீவிரம் காட்டும். அதனால், இன்றைய போட்டியில் நல்ல விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை சென்னை, கொல்கத்தா அணிகள் 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 18 முறையும், கொல்கத்தா அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. வெற்றி கணக்கில் சென்னை முன்னணியில் இருப்பதால், இந்த போட்டியில் கண்டிப்பாக சிஎஸ்கே வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

போட்டி துவங்குவதற்கு முன்னதாக டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ், பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   

பிரச்சாரத்தில் நடிகை காஜலுக்கு திடீர் மாரடைப்பு... மருத்துவமனையில் அனுமதி!

காதலனை நம்பி சென்ற கல்லூரி மாணவி கொலை... பணத்திற்காக நடந்த கொடூரம்!

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு... இடைத் தேர்தல் எப்போது?

ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த நபர் உயிருக்குப் போராட்டம்!

கையில் சூலம்... காலில் சலங்கை... மிரட்டும் அல்லு அர்ஜூன்... தெறிக்குது ’புஷ்பா2’ டீசர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in