அப்பட்டமான பொய்; ராஜ்நாத் சிங் தனது கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது... ப.சிதம்பரம் ஆதங்கம்!

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

அப்பட்டமான பொய்களை கூறி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி தனது கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், 'ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் பேசுவது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறியதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் மக்களின் சொத்துக்களை கைப்பற்றி, ஊடுருவல்காரர்களுக்கு மறுபங்கீடு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

நான் ராஜ்நாத் சிங்கிடம் கேட்க விரும்புகிறேன், சொத்துக்களை பறித்து ஊடுருவல்காரர்களுக்கு காங்கிரஸ் தருமென, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையின் எந்தப் பக்கத்தில் அந்த அறிக்கையைப் படித்தீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ராஜ்நாத் சிங் கண்ணுக்கு தெரியாத மையில் பேய்கள் எழுதிய ஆவணத்தைப் படித்துக் கொண்டிருந்தாரா? இதுபோன்ற அப்பட்டமான பொய்களை கூறி பாதுகாப்பு அமைச்சர் தனது கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது' என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் அனலை கிளப்பி வருகிறது. பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் அவர், இஸ்லாமிய வெறுப்பை தூண்டுவதாகவும், மதத்தை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்வதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்களும் தங்கள் பிரச்சாரத்தை வேகப்படுத்தியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

ReplyReply allForwardAttendee panel closed

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in