பெண்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற்று தந்தது திராவிடம்தான்... பொன்முடி பேச்சு!

பொன்முடி
பொன்முடி

"பெண்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் மற்றும் கல்வியை பெற்றுத் தந்தது திராவிடம் தான்" என்று பேசிய அமைச்சர் பொன்முடி, பிரச்சாரத்தின் நடுவே சிறுமியிடம் பள்ளியில் வழங்கும் காலை உணவு குறித்து கேட்டறிந்தார்.

விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமாருக்கு ஆதரவாக அமைச்சர் பொன்முடி, காணை ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னாங்குப்பம் பகுதியில் இன்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, பெண்களிடையே பேசிய அவர், "இந்தியாவில் எந்த அரசும் செய்யாத பல முன்னோடி திட்டங்களை திராவிட அரசு செய்துள்ளது. விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்களால் பெண்கள் தன்னம்பிக்கையோடு, யாரையும் சாராமல் வாழ முடியும். மேலும், காலை சிற்றுண்டி திட்டம், தாய்மார்களின் சுமையை போக்கி பிள்ளைகளின் பசியை நீக்கியுள்ளது. எனவே திமுக அரசு என்றாலே மகளிருக்கான அரசுதான்.

ரவிக்குமார்
ரவிக்குமார்

பெண்களுக்கு கல்வி என்பது காலங்காலமாக மறுக்கப்பட்டு வந்தது. அதனை உடைத்தெறிந்து கல்வி எனும் கரையாத செல்வத்தை பெண்கள் பெற வேண்டும் என போராடியவர் பெரியார். அவரின் பாதையில் அவர் கண்ட கனவை செயல்படுத்தியவர்கள் அண்ணா, கலைஞர். அவர்களின் வழி வந்த முதலமைச்சர் ஸ்டாலினும் பெண்கள் முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

மதம், சாதி என்று எந்த ஒரு பிரிவும் நமக்கிடையே கிடையாது. சாதி என்பது இன்றைய சூழலில் இருக்கக் கூடாது. ஆண் - பெண் இருவரும் ஒன்றுதான் எனும் புரிதல் இருந்திட வேண்டும். ஆகையால், நீங்கள் அனைவரும் பெருமையாக திராவிடப் பெண் என கூறுங்கள். உங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை, கல்வியை பெற்று தந்தது திராவிடம்.

காலை உணவு குறித்து சிறுமியிடம் விசாரித்த அமைச்சர் பொன்முடி!
காலை உணவு குறித்து சிறுமியிடம் விசாரித்த அமைச்சர் பொன்முடி!

அனைவரும் சமம் என்பதே திராவிடம். அதுவே திராவிட ஆட்சியின் அடிப்படை. பாலின ஏற்றத்தாழ்வைக் கலைந்து பாலின சமத்துவத்தை கட்டமைப்பதே ஒரு சமூகத்திற்கு அவசியமாகும். அதை நிறைவேற்றவே திமுக அரசு எண்ணற்ற பல நலத்திட்டங்களை முன்னெடுக்கிறது" என்றார்.

பின்னர், அங்கிருந்த சிறுமியை அழைத்து, பள்ளியில் காலை உணவு தருகிறார்களா, சுவையாக இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு அந்த சிறுமி நன்றாக இருப்பதாக பதில் அளித்தார்.

இதையும் வாசிக்கலாமே...   


‘தலித் அரசியல் ரஜினிக்கு தெரியுமா?’ ரசிகர்கள் ஆவேசம்!

‘வேண்டாம்... கைவிடுங்க...’ ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

மீனவர்களில் வங்கிக் கணக்கில் ரூ.5,000... தடைக்காலம் தொடங்கும் நிலையில் நிவாரணம்!

திருமண நாளைக் கொண்டாடி விட்டு, நள்ளிரவில் தூக்கில் தொங்கிய 6 மாத கர்ப்பிணி!

சர்ச்சை வீடியோ: ஹெல்மெட் போடலை... நம்பர் பிளேட் கிடையாது... ராதிகாவுடன் பைக்கில் பறந்த சரத்குமார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in