‘வேண்டாம்... கைவிடுங்க...’ ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

எதிர்பார்த்ததை விடவும் மிக விரைவில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் தொடுக்கலாம் எனவும் அவ்வாறு போர் தொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று சிரியா நாட்டில் உள்ள டமாஸ்கஸ் நகரில், ஈரான் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக பேசியுள்ள ஈரான் அதிபர் அலி காமினே, தாக்குதல் நடத்தியவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என எச்சரித்து இருந்தார்.

இஸ்ரேல் - ஈரான்
இஸ்ரேல் - ஈரான்

இது போர் அறிவிப்பை போன்று இருப்பதாக சர்வதேச நாடுகள் கருத்து தெரிவித்து வந்தன. இருப்பினும் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஈரான் எதிர்பார்த்ததை விட விரைவிலேயே இஸ்ரேல் மீது அதிகாரப்பூர்வமாக தாக்குதல் நடத்தலாம் என எச்சரித்துள்ள ஜோ பைடன், அவ்வாறு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், அதனை முழுமையாக அமெரிக்கா எதிர்கொள்ளும் எனவும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான்
இஸ்ரேல் - ஈரான்

இதனிடையே இந்தியா, பிரான்ஸ், போலந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளன.

ஜெர்மனி, ஈரான் நாட்டில் வசித்து வரும் தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என நேற்று அறிவித்திருந்தது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் பேசி இருப்பது போர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் இருப்பதாக கருத்து நிலவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...   


+2க்கு பிறகு என்ன படிக்கலாம்? வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்... ஸ்காலர்ஷிப் விவரங்கள்!

ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல்... பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி!

"தம்பி அண்ணாமலை... பார்த்து நடந்துக்க... ஆணவ திமிரில் இப்படி பேசாதப்பா..." பகிங்கிரமாக எச்சரித்த பழனிசாமி!

தடுப்புகளைத் தாண்டி  இனிப்புக் கடைக்குச் சென்ற ராகுல்... ஸ்டாலினுக்கு வழங்கி அன்புப் பரிமாற்றம்!

தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்களின் டார்கெட்... கரூரை கைப்பற்றப் போவது யாரு? கள நிலவரம் இதுதான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in