சர்ச்சை வீடியோ: ஹெல்மெட் போடலை... நம்பர் பிளேட் கிடையாது... ராதிகாவுடன் பைக்கில் பறந்த சரத்குமார்!

சர்ச்சை வீடியோ: ஹெல்மெட் போடலை... நம்பர் பிளேட் கிடையாது... ராதிகாவுடன் பைக்கில் பறந்த சரத்குமார்!

விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கி இருக்கும் தனது மனைவி ராதிகாவை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக சிவகாசி சென்றுள்ளார் நடிகர் சரத்குமார். அங்கு நம்பர் பிளேட் இல்லாத பைக்கைப் பார்த்தவர் ‘சூர்யவம்சம்’ சின்ராசாக மாறி மனைவி ராதிகாவை உட்கார வைத்து, ஜாலியாக ரைட் சென்றிருக்கிறார். ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பறந்த இந்த ஜோடியின் வீடியோ இப்போது சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், அனைத்துக் கட்சியினரும் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில் பாஜக சார்பில் விருதுநகரில் போட்டியிடும் நடிகை ராதிகாவுக்கு பக்கபலமாக அவரது கணவர் சரத்குமாரும் இருக்கிறார். விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருவரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நேற்று சிவகாசியில் இருவரும் வாக்கு சேகரிக்கச் சென்றனர். அங்கு நம்பர் பிளேட் இல்லாத பைக்கை பார்த்த சரத்குமார், உடனே ராதிகாவை பைக்கின் பின்னால் அமர வைத்து சின்ராசாக மாறி சிட்டாகப் பறந்தார். ஒவ்வொரு தெருவாக பைக்கில் சென்று பொதுமக்களிடம் வாக்குக் கேட்டிருக்கிறது இந்த ஜோடி.

’மறக்காம ஓட்டு போட்டுருங்க’ என்று சிரித்த முகத்தோடு மக்களிடம் பேசினார் ராதிகா. அங்கிருந்தவர்களும் ராதிகா, சரத்குமாருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். நம்பர் பிளேட் இல்லாத பைக்கில், இருவரும் ஹெல்மெட் போடாமல் பயணித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

விருதுநகரில் பாஜக சார்பில் ராதிகா போட்டியிட அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் விருதுநகரில் நிற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...   


+2க்கு பிறகு என்ன படிக்கலாம்? வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்... ஸ்காலர்ஷிப் விவரங்கள்!

ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல்... பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி!

"தம்பி அண்ணாமலை... பார்த்து நடந்துக்க... ஆணவ திமிரில் இப்படி பேசாதப்பா..." பகிங்கிரமாக எச்சரித்த பழனிசாமி!

தடுப்புகளைத் தாண்டி  இனிப்புக் கடைக்குச் சென்ற ராகுல்... ஸ்டாலினுக்கு வழங்கி அன்புப் பரிமாற்றம்!

தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்களின் டார்கெட்... கரூரை கைப்பற்றப் போவது யாரு? கள நிலவரம் இதுதான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in