BREAKING: அதிர்ச்சி வீடியோ... தேர்தல் பிரச்சாரத்தில் மேடையிலேயே மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி; மருத்துவமனையில் அனுமதி!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா மாநிலம் எவட்மால் பகுதியில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். யவட்மால்-வாசிம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஹேமந்த் ராஜ் ஸ்ரீக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார்.

பாஜகவின் பத்தாண்டு கால சாதனைகள் மற்றும் தனது துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து விளக்கமாக அவர் பேசிக் கொண்டிருந்தார். மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். இதனால் கூட்ட மேடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக உடன் இருந்த கட்சி நிர்வாகிகள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் நிதின் கட்கரி
மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் நிதின் கட்கரி

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் அவர் உடல் நலம் பெற்று வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அதிக வெயில் காரணமாக அவர் மயங்கி விழுந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in