நிதின் கட்கரி மயக்கமும், 7 கட்டத் தேர்தல் நடைமுறையும்... மம்தா பானர்ஜியின் அரசியல் வெப்ப அலை வீச்சு

 நிதின் கட்கரி மயக்கம் - மம்தா பானர்ஜி கேள்வி
நிதின் கட்கரி மயக்கம் - மம்தா பானர்ஜி கேள்வி

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்ததை அடுத்து, மக்களவை தேர்தலுக்கான 7 கட்டமாக நீளும் வாக்குப்பதிவு நடைமுறைகளை மம்தா பானர்ஜி கேள்விக்குள்ளாக்குகிறார்.

மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரத்தின்போது வெப்ப அலையின் வீச்சு தாங்காது, பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி இன்றைய தினம் மயங்கி விழுந்தார். இது கோடை வெயிலில் பிரச்சாரக் களம் காணும் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏப்ரலுக்கே இந்த வெயில் கொடுமை எனில், ஜூன் தொடக்கம் வரை நீடிக்கும் வாக்குப்பதிவுக்கான தேர்தல் களப்பணிகளை எவ்வாறு எதிர்கொள்வது என அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா பானர்ஜி
தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா பானர்ஜி

இந்த கவலைகளை மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி எதிரொலித்துள்ளார். நாடு முழுவதும் கடும் வெயில் நிலவி வரும் நிலையில் ஜூன் வரை ஏழு கட்ட தேர்தல்கள் நடைபெறுவது குறித்து கவலை எழுப்பியிருக்கும் மம்தா பானர்ஜி, ”மூத்த மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான நிதின் கட்கரி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்" என்று தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருக்கிறார்.

“இந்தக் கொடுமையான கோடையின் கடுமையான வெப்பத்தில் தேர்தல் நடத்துவது உண்மையில் தாங்க முடியாதது. இன்று ஏப்ரல் 24. எங்களின் 7 கட்ட தேர்தல்கள் ஜூன் 1 வரை தொடரும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?!” என்று அந்த பதிவில் மம்தா பானர்ஜி கேட்டிருக்கிறார்.

முன்னதாக, மகாராஷ்டிர மாநிலம் யவத்மால்-வாஷிம் மக்களவைத் தொகுதியில் உள்ள புசாத் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் நிதின் கட்கரி பேசும்போது, ​​எதிர்பாரா வகையில் திடீரென சரிந்து விழுந்தார். மத்திய அமைச்சர் மயங்கியதால் பதற்றமடைந்த அவரது உதவியாளர்கள், மேடைக்கு அப்பால் அவரை கொண்டு சென்றனர். அடுத்த சில நிமிடங்களில் அமைச்சர் நிதின் கட்கரி இயல்புக்கு திரும்பியதோடு தனது உரையையும் நிறைவு செய்தார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நிதின் கட்கரி "மகாராஷ்டிர மாநிலம் புசாத் பொதுக்கூட்டத்தில் வெப்பம் காரணமாக சற்று சோர்வடைந்தேன். ஆனபோதும் தற்போது நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன். அடுத்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருட் நகருக்குச் செல்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே வெப்ப அலை காரணமாக வாக்காளர்களின் பங்களிப்பு மற்றும் வாக்கு சதவீதம் குறைய வாய்ப்புள்ளது குறித்து, தேர்தல் ஆணையம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in