‘இந்தியா கூட்டணி’யின் ஆண்டுக்கொருவர் ஆட்சி முடிவால் பிரதமர் நாற்காலி ஏலம் போகும்... மோடியின் அடுத்த அட்டாக்!

பிரதமர் மோடி - ராகுல் காந்தி
பிரதமர் மோடி - ராகுல் காந்தி

’நாட்டை அழிக்கும் நோக்கோடு இந்தியா கூட்டணி கட்சியினர், ஓராண்டு பிரதமர் திட்டத்துடன் வருகிறார்கள்’ என வாக்காளர்களை பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்தோறும், எதிர்க்கட்சியினருக்கு எதிராக பிரதமர் மோடி அதிரடி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறார். அவை எதிர்க்கட்சிகளையும், தேர்தல் பிரச்சாரக் களங்களையும் அலைக்கழித்து வருகின்றன. இந்த வரிசையில், ‘இந்தியா கூட்டணி’ கட்சியினர் தங்களுக்கு என தனி பிரதமர் முகம் இல்லாததால், ஆண்டுக்கொரு பிரதமர் திட்டத்துடன் வருகிறார்கள்’ என்று அடுத்த குண்டை வீசியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி

மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் நகரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, "எதிர்க்கட்சியினரின் பிரதமர் முகம் யார் என்று நாடு தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் தரப்பில் இதோ மோடி நிற்கிறேன். ஆனால் எதிர்க்கட்சிகள் தரப்பில் பிரதமர் முகம் எங்கே? அவர்கள் ஆண்டுக்கொரு பிரதமர் சூத்திரம் பற்றி விவாதிக்கிறார்களாம். அதாவது 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களாம். இந்த நாடு தாங்குமா? நாடு பாதுகாப்பாக இருக்குமா?” என்று மோடி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

மேலும் அவர் பேசும்போது "இதன் அர்த்தம் அவர்கள் இந்த தேசத்தின் பிரதமர் நாற்காலியை ஏலம் விடுகிறார்கள். ஒருவர் நாற்காலியில் உட்காருவார். மிச்ச நான்கு பேர் அவரது பதவிக்காலம் எப்போது முடியும் எனக் காத்திருப்பார்கள். இது சந்தேகமின்றி பகல் கனவுதான். ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த திட்டம், நாட்டை அழிக்கும் அளவுக்கு பயங்கரமானது. நாட்டு மக்கள் கனவுகள் அனைத்தையும் சிதைத்து விடக்கூடியது” என்றும் அவர் சாடியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி குடிமக்களின் சொத்துக்களை பறித்து ’மறு பங்கீடு’ செய்துவிடும் என்று பிரதமர் மோடி கிளப்பிய குற்றச்சாட்டுக்கு அடுத்தபடியாக, இந்தியா கூட்டணி கட்சியினருக்கு எதிராக இந்த ’ஆண்டுக்கொரு பிரதமர்’ குற்றச்சாட்டை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார். ஊடக செய்தி மற்றும் சமூகதள விவாதங்கள் அடிப்படையில் இந்த புகாரை மோடி தனது பிரச்சாரத்தில் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்.

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி

இந்தியா கூட்டணியின் பாதக அம்சங்களில் ஒன்றாக இந்த பிரதமர் முகம் குறித்த சர்ச்சை நீடித்து வருகிறது. இந்தியா கூட்டணியை கட்டமைத்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார், தன்னை பிரதமர் முகமாக காங்கிரஸ் அறிவிக்கத் தயங்கியதில் கோபமாக் பாஜக முகாமுக்குத் தாவினார். கூட்டணி உருவானது முதலே, மம்தா பானர்ஜி மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரை பிரதமர் முகமாக அவர்களின் ஆதரவாளர்கள் அறிவித்து வருகின்றனர். இந்த தலைவர்கள், காங்கிரஸின் ராகுல் காந்தியை பிரதமர் முகமாக்க மறுதலித்து வருகின்றனர். இந்தியா கூட்டணி கட்சியினரின் இந்த குழப்பமே, பிரதமர் மோடி வாயால் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in