தேர்தல் விநோதம்... ராஜஸ்தானில் சொந்த வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் காங்கிரஸ்!

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி

ராஜஸ்தானில் பன்ஸ்வாரா-துங்கர்பூர் மக்களவைத் தொகுதியில் ஒரு விசித்திரமான தேர்தல் போட்டி ஏற்பட்டுள்ளது. அங்கு காங்கிரஸ் தனது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என மக்களிடம் பிரச்சாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் பன்ஸ்வாரா-துங்கர்பூர் மக்களவைத் தொகுதி, பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் தொகுதியாகும். இங்கு முதலில் காங்கிரஸ் சார்பில் பல திருப்பங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி, பாரத் ஆதிவாசி கட்சியுடன் (பிஏபி) கூட்டணி அமைக்க முடிவு செய்தது.

ராஜ்குமார் ரோட்
ராஜ்குமார் ரோட்

இதைத் தொடர்ந்து இரு கட்சிகளும் தங்கள் கூட்டு வேட்பாளராக ராஜ்குமார் ரோட் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இருப்பினும், கூட்டணி அமைப்பதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் அரவிந்த் டாமர், தனது வேட்பு மனுவை திரும்பப் பெற, தற்போது மறுத்து வருகிறார்.

இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் - பிஏபி கூட்டணி இடையே இருமுனை போட்டியாக இருக்க வேண்டிய நிலையில் தற்போது மும்முனை போட்டியாக மாறியுள்ளது.

அரவிந்த் டாமர்
அரவிந்த் டாமர்

காங்கிரஸின் உள்ளூர் தலைவர்கள் தங்கள் சொந்த வேட்பாளருக்கு பதிலாக ராஜ்குமார் ரோட்டுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்கிடையே, பிஏபி உடனான கூட்டணியை எதிர்க்கும் கட்சித் தலைவர்களில் ஒரு பிரிவின் ஆதரவு தனக்கு இருப்பதாக அர்விந்த் டாமர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் சார்பில் கூட்டணியாகவும், தனியாகவும் இரு வேட்பாளர்கள் நிற்பதால் வாக்குகள் பிரிய வாய்ப்பு உள்ளது.

மகேந்திரஜித் சிங் மால்வியா
மகேந்திரஜித் சிங் மால்வியா

இதன் காரணமாக பாஜக வேட்பாளரான மகேந்திரஜித் சிங் மால்வியாவுக்கு சாதகமான நிலை உருவாகியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in