ராகுல் காந்தி - தேவ கவுடா
ராகுல் காந்தி - தேவ கவுடா

ராகுல் காந்தி தன்னை மாவோயிஸ்ட் தலைவராக பாவிக்கிறாரா? -முன்னாள் பிரதமர் கிண்டல் கேள்வி

’ராகுல் காந்தி தன்னை மாவோயிஸ்ட் தலைவராக பாவிக்கிறாரா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவருமான எச்.டி.தேவகவுடா.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர் பட்டியலில் ஜேடிஎஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகவுடாவும் சேர்ந்திருக்கிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையோடு அவர் ராகுல் காந்தியையும் சேர்த்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கிய தேவ கவுடா, காங்கிரஸ் கட்சி நாட்டை தலைக்குப்புற மாற்ற விரும்புகிறது என்றும் குற்றம் சாட்டினார். "ஒருபோதும் ஆட்சிக்கு வராது என்பதில் உறுதியாக இருக்கும் ஒரு கட்சியால் மட்டுமே இத்தனை வாக்குறுதிகளை அளிக்க முடியும்" என்றும் அவர் சாடியுள்ளார். மேலும்"காங்கிரஸார் எந்த விலையிலேனும் அதிகாரத்தை அடையத் துடிக்கிறார்கள்" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

’காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்களின் சொத்துக்களை பறித்து மறுபங்கீடு செய்யும்’ என்று பாஜக குற்றம்சாட்டி வரும் நிலையில் தேவ கவுடாவின் இந்த புதிய தாக்குதல் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனது ’தேர்தல் அறிக்கையானது சமூகப் பொருளாதார ஜாதிக் கணக்கெடுப்பைப் பற்றி பேசுகிறது என்றும், சொத்துக்களின் மறுபகிர்வு பற்றி பேசவில்லை’ என்றும் விளக்கம் அளித்தும், அது பாஜக தாக்குதலின் மத்தியில் எடுபடவில்லை.

தேவ கவுடா
தேவ கவுடா

காங்கிரஸ் கட்சி மீதான தனது தாக்குதலைத் தொடர்ந்த தேவகவுடா, அதன் தேர்தல் அறிக்கையில் கூறப்படும் திட்டங்களை மாவோயிஸ்ட் தலைவர்கள் மற்றும் புரட்சிகர இயக்கங்களின் கொள்கைகளுடன் ஒப்பிட்டார். “ராகுல் காந்தி சொத்துக் கணக்கெடுப்பு நடத்தி செல்வத்தை மறுபங்கீடு செய்ய விரும்புகிறார். அவர் தன்னை ஒரு மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா? அவர் ஒரு புரட்சியைக் கனவு காண்கிறாரா?” என்றும் பகடி தொனியில் பெரு வியப்பு காட்டியிருக்கிறார் தேவகவுடா.

கர்நாடக மாநிலத்தில் நடப்பு மக்களவைத் தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து, தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in