விதிமுறைகளை மீறி பிரச்சாரம்... அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் புகார்!

விதிமுறைகளை மீறி பிரச்சாரம்... அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் புகார்!
Updated on
2 min read

கோவையில் தொடர்ந்து விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அண்ணாமலை, தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அண்ணாமலை தேர்தல் விதிமுறைகளை மீறி தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு 10.45 மணியளவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அண்ணாமலை மற்றும் பாஜகவினரை கேள்வி எழுப்பிய திமுக கூட்டணி கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இரா. முத்தரசன்
இரா. முத்தரசன்

இந்த சம்பவத்தில் 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாமலை மீது தேர்தல் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்றும் இரவு 10 மணிக்கு மேல் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

அந்த மனுவில், தொடர்ந்து தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவை ஆவாரம்பாளையத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விதிகளை மதிக்காமல் செயல்படும் அண்ணாமலை மீது சட்டபூர்வ நடவடிக்கை தேவை எனவும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   


‘தலித் அரசியல் ரஜினிக்கு தெரியுமா?’ ரசிகர்கள் ஆவேசம்!

‘வேண்டாம்... கைவிடுங்க...’ ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

மீனவர்களில் வங்கிக் கணக்கில் ரூ.5,000... தடைக்காலம் தொடங்கும் நிலையில் நிவாரணம்!

திருமண நாளைக் கொண்டாடி விட்டு, நள்ளிரவில் தூக்கில் தொங்கிய 6 மாத கர்ப்பிணி!

சர்ச்சை வீடியோ: ஹெல்மெட் போடலை... நம்பர் பிளேட் கிடையாது... ராதிகாவுடன் பைக்கில் பறந்த சரத்குமார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in