தேர்தல் மை
தேர்தல் மை

ஓட்டுப் போடுறவங்களுக்கு ஓட்டல்களில் சூப்பர் ஆஃபர்... செங்கல்பட்டு கலெக்டரின் அதிரடி நடவடிக்கை!

மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 19-ம் தேதி வாக்களித்துவிட்டு, விரலில் மை இருந்தால் மறுநாள் உணவகங்களில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

தேர்தல் ஆணையம் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற ஏப்ரல் 19-ம் தேதி வாக்களிக்கும் போது வாக்காளர்களின் விரலில் மை வைக்கப்படும். மறுநாள் ஏப்ரல் 20-ம் தேதி, செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் உள்ள உணவகங்களில் சாப்பிட செல்லும்போது விரலில் மை இருப்பதை காண்பித்தால் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவு
உணவு

வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீத வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவக உரிமையாளர்களின் இந்த அறிவிப்பிற்கு வாக்காளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...   


‘தலித் அரசியல் ரஜினிக்கு தெரியுமா?’ ரசிகர்கள் ஆவேசம்!

‘வேண்டாம்... கைவிடுங்க...’ ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

மீனவர்களில் வங்கிக் கணக்கில் ரூ.5,000... தடைக்காலம் தொடங்கும் நிலையில் நிவாரணம்!

திருமண நாளைக் கொண்டாடி விட்டு, நள்ளிரவில் தூக்கில் தொங்கிய 6 மாத கர்ப்பிணி!

சர்ச்சை வீடியோ: ஹெல்மெட் போடலை... நம்பர் பிளேட் கிடையாது... ராதிகாவுடன் பைக்கில் பறந்த சரத்குமார்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in