வன்முறையில் ஈடுபடுவோர் தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படும்... கல்கத்தா உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

மேற்கு வங்கத்தில் ராம நவமி வன்முறை
மேற்கு வங்கத்தில் ராம நவமி வன்முறை

மேற்கு வங்கம் மாநிலத்தில் வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்படும் என கல்கத்தா உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏப்ரல் 13 மற்றும் 17 ஆகிய தினங்களில் ராம நவமி ஊர்வலத்தின் போது முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறை தொடர்பான விசாரணையின் போது கல்கத்தா உயர் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.

கல்கத்தா உயர் நீதிமன்றம்
கல்கத்தா உயர் நீதிமன்றம்

”மக்கள் அமைதியாகவும், நல்லிணக்கத்துடனும் வாழ முடியாவிட்டால், இந்த தொகுதிகளில் மக்களவைத் தேர்தலை தேர்தல் ஆணையத்தால் நடத்த முடியாது என்று கூறுவோம்” என தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான அமர்வு கூறியது. "மாதிரி நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், மக்கள் இருபிரிவாக இப்படி சண்டையிட்டால், அவர்கள் தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்ய தகுதியற்றவர்களாகின்றனர்" என்றும் நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

”ராம நவமி அன்று மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் 23 இடங்களில் கொண்டாட்டங்கள் நடந்தன, ஆனால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது இவை நடந்துள்ளன. மாநில போலீஸ் மற்றும் மத்திய படைகள் என்ன செய்கின்றன? இருவராலும் மோதலை கட்டுப்படுத்த முடியவில்லையா?" எனவும் நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

விசாரணையின்போது பதிலளித்த அரசு வழக்கறிஞர், ‘வன்முறை தொடர்பான காவல்துறை வழக்குகள் மற்றும் அவற்றில் கைது செய்யப்பட்டோர் விவரம், தற்போது சிஐடி போலீஸார் விசாரணைக்குப் பொறுப்பேற்று இருப்பது’ உள்ளிட்ட தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதற்கு பதிலளித்த நீதிமன்ற அமர்வு, "அமைதியாக ஆன்மிக நிகழ்வுகளை கொண்டாட இவர்களால் முடியவில்லை. அப்படியானவர்களை தேர்தலில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்வோம்” என்று எச்சரித்தது.

மேற்கு வங்கத்தில் ராம நவமி வன்முறை
மேற்கு வங்கத்தில் ராம நவமி வன்முறை

ஏப்ரல் 13 மற்றும் 17ம் தேதிகளில் பஹரம்பூர் பகுதியில் நடந்த மோதல்கள் குறித்து சிபிஐ மற்றும் என்ஐஏ விசாரணை கோரி இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கொல்கத்தா பகுதி ஒருங்கிணைப்பாளர் அமியா சர்க்கார் மற்றும் மேற்கு வங்கம் முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்சாவின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏ.அஃப்சல் ஆகியோர் தலா ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தனர்.

ராமநவமி கொண்டாட்டத்தை முன்வைத்து குறிப்பிட்ட தரப்புக்கு ஆதரவாக வாக்குகளை திருப்பும் திட்டத்துடன் வன்முறை அங்கே பரப்பப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். அங்கு நடந்தேறிய வன்முறைகளுக்கும், மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்கும் இடையிலான தொடர்பே, தேர்தலுக்கு தடை விதிப்போம் என உயர் நீதிமன்றத்தை சீறச் செய்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in