திருமாவளவன் ஜெயித்தால் தொகுதி பக்கமே வரமாட்டார்... சிதம்பரம் பாஜக வேட்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!

திருமாவளவன்- கார்த்தியாயினி
திருமாவளவன்- கார்த்தியாயினி

"மக்களவைத் தேர்தலில் வெற்றிப் பெற்றால் திருமாவளவன் தொகுதி பக்கம் கூட வரமாட்டார். ஆனால், நான் வெற்றிப் பெற்றால் தொகுதியிலேயே தங்கி மக்கள் பணி செய்வேன்" என்று சிதம்பரம் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விசிக தலைவர் திருமாவளவன், பாஜக கூட்டணி சார்பில் அக்கட்சியின் வேட்பாளர் கார்த்தியாயினி, அதிமுக கூட்டணி சார்பில் சந்திரகாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் வெற்றியை பெறுவதற்காக அனைத்து வேட்பாளர்களும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக விசிக தலைவர் திருமாவளவன் இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதியாக மாறிவிட்டது. அவருக்கான உதயநிதி ஸ்டாலின், கமல் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.

திருமாவளவனுக்காக கமல் பிரச்சாரம்
திருமாவளவனுக்காக கமல் பிரச்சாரம்

இந்த போட்டியை வெல்வதற்காக பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது மக்களிடையே பேசிய அவர், "கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு திருமாவளவன் நன்றி சொல்ல கூட தொகுதி பக்கம் வரவில்லை. தற்போது ஓட்டு கேட்டு வந்து கொண்டிருக்கிறார். அவர் வெற்றி பெற்றுவிட்டால் மீண்டும் தொகுதிபக்கம் வர மாட்டார். மத்தியில் மீண்டும் மோடியின் ஆட்சி தான் வரப்போகிறது. எனவே நான் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதால் வெற்றி பெற்றவுடன் பிரதமரிடம் நேரடியாக சென்று சிதம்பரம் தொகுதி மக்களுக்கான அனைத்து விதமான நலத்திட்டங்களையும் கேட்டு பெறமுடியும்.

கார்த்தியாயினி பிரச்சாரம்
கார்த்தியாயினி பிரச்சாரம்

பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாத இந்தியா கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் எந்த நலத்திட்டங்களையும் கேட்டு பெற முடியாது. எனக்கு ஓட்டு போட்டு வெற்றி பெறச் செய்தால் எனது குடும்பத்துடன் இதே தொகுதியில் வந்து தங்கி விடுவேன். என் குழந்தைகளை இங்குள்ள பள்ளியிலேயே படிக்க வைப்பேன். எனது வாக்குறுதிகளை நான் நிறைவேற்றா விட்டால், பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்காவிட்டால், உங்கள் தொகுதியில் தங்கி உள்ள என்னை நேரில் வந்து கேள்வி கேட்கலாம்" என்று அவர் கூறினார்

இதையும் வாசிக்கலாமே...   

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவு... தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வங்கிக் கணக்கு முடக்கம்... வருமான வரித்துறையின் அடுத்த அதிரடி!

கோவையில் ரூ.3.54 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்... தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியது!

கிளம்பிட்டாரு நவரச நாயகன் கார்த்திக்... அதிமுகவுக்கு ஆதரவாக தென் மாவட்டங்களில் பிரச்சாரமாம்!

11 வயதில் வீட்டை விட்டு அனுப்பி வைத்தார்கள்...மனம் உடைந்த பிரபல நடிகர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in