மக்களவை தேர்தலில் களமிறங்கும் அகிலேஷ்... லாலுவின் மருமகனுக்குப் பதிலாக கன்னோஜில் போட்டியிட முடிவு!

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவும் களம் இறங்கிறார். இவர் முன்பு எம்பி-யாக இருந்த கன்னோஜில் லாலு பிரசாத் யாதவின் மருமகன் தேஜ் பிரதாப்பிற்கு பதிலாக போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

உத்தரப்பிரதேசத்தில் இந்தமுறை மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியில் முக்கிய மாற்றம் காணப்படுகிறது. இதன் சார்பில் அறிவிக்கப்பட்டவர்களில் பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மீரட்டில் இரண்டு முறை வேட்பாளர் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதனால், சமாஜ்வாதியினர் இடையே அதிருப்தி நிலவுகிறது. இந்நிலையில், மீண்டும் ஒரு மாற்றம் உபியின் கன்னோஜில் வர உள்ளது.

கடந்த ஏப்ரல் 22-ல் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், கன்னோஜ் தொகுதிக்கு தனது ஒன்றுவிட்ட சகோதரர் மகனான தேஜ் பிரதாப் பெயரை அறிவித்திருந்தார். இந்த தொகுதியில் 2009-ல் அகிலேஷ் எம்பி-யாகி இருந்தார். அவருக்கு பின் அவரது மனைவி டிம்பிள் யாதவும் கனோஜ் எம்பி-யாக இருந்தார். இப்போது இந்த தொகுதியில் தானே மீண்டும் போட்டியிட அகிலேஷ் முடிவு செய்துள்ளார்.

டிம்பிள் யாதவ்
டிம்பிள் யாதவ்

அகிலேஷையே போட்டியிட வேண்டும் என அவரது கட்சியினர் விரும்புவதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், தேஜ் பிரதாப்பிற்கான ஆதரவும் குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, தானே போட்டியிட அகிலேஷ் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

2019 மக்களவை தேர்தலில் தேஜ் பிரதாப்பிற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 2014-ல் சமாஜ்வாதியின் மறைந்த நிறுவனர் முலாயம்சிங் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார். இவற்றில் ஆசம்கர் தொகுதியை வைத்துக்கொண்டு மெயின்புரியை ராஜினாமா செய்தார். பிறகு, ஆசம்கர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேஜ் பிரதாப் முதன்முறையாக வென்று எம்பி-யானார். 2022-ல், மெயின்புரி எம்பி-யான முலாயம் இறந்தமையால் அங்கு அவரது மருமகளான அகிலேஷின் மனைவி டிம்பிள் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

முலாயம்சிங் யாதவ்
முலாயம்சிங் யாதவ்

இந்தமுறையும் மெயின்புரியில் டிம்பிள் போட்டியிடுகிறார். உபியின் எதிர்கட்சித் தலைவரான அகிலேஷ், தாம் மாநில அரசியலில் இருக்க விரும்பி மக்களவைக்கு போட்டியிடவில்லை எனக் கூறி இருந்தார். இப்போது வேறுவழியின்றி, தானே போட்டியிட வேண்டிய சூழல் அகிலேஷுக்கு உருவாகி உள்ளது.

உபியின் 80 தொகுதிகளில் சமாஜ்வாதி 63, காங்கிரஸ் 17 என இந்தியா கூட்டணி போட்டியிடுகிறது. இங்கு 7 கட்டங்களாக நடக்கும் தேர்தலில் நான்காவது கட்டமாக கன்னோஜில் மே 13 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in