தேர்தல் ஆணையத்தில் அதிமுக திகில் புகார்... இஸ்ரேல் உளவு மென்பொருளால் ஒட்டுக் கேட்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையத்தில் அதிமுக திகில் புகார்... இஸ்ரேல் உளவு மென்பொருளால் ஒட்டுக் கேட்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு!

தங்கள் கட்சித் தலைவர்களின் செல்போன் எண்களை ஒட்டு கேட்க, இஸ்ரேல் நாட்டின் உளவு மென்பொருள் பயன்படுத்தப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அரசியல் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ-வும், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளருமான இன்பத்துரை, தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனுவை அனுப்பியுள்ளார்.

இன்பதுரை
இன்பதுரை

அந்த புகார் மனுவில்," தேர்தல் துவங்கியதில் இருந்து அதிமுக தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள், வாகன ஓட்டிகளின் செல்போன் எண்களை உளவுத்துறை தொடர்ந்து சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளின் தேர்தல் வியூகங்களை அறிந்து கொள்வதற்காக இவ்வாறு ஒட்டு கேட்கும் பணி நடைபெறுகிறது.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

இதற்காக இஸ்ரேல் நாட்டில் இருந்து 40 கோடி ரூபாய் மதிப்பிலான உளவு மென்பொருள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக உளவுத்துறையின் இந்த நடவடிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு உளவுத்துறையின் ஐஜி செந்தில்வேலன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் இந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   


‘தலித் அரசியல் ரஜினிக்கு தெரியுமா?’ ரசிகர்கள் ஆவேசம்!

‘வேண்டாம்... கைவிடுங்க...’ ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

மீனவர்களில் வங்கிக் கணக்கில் ரூ.5,000... தடைக்காலம் தொடங்கும் நிலையில் நிவாரணம்!

திருமண நாளைக் கொண்டாடி விட்டு, நள்ளிரவில் தூக்கில் தொங்கிய 6 மாத கர்ப்பிணி!

சர்ச்சை வீடியோ: ஹெல்மெட் போடலை... நம்பர் பிளேட் கிடையாது... ராதிகாவுடன் பைக்கில் பறந்த சரத்குமார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in