வள்ளலார் சர்வதேச மையம் | தொல்லியல் குழு அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் (மாதிரி)
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் (மாதிரி)

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் இடத்தை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடலூரில் வள்ளலார் கோவில் அமைந்துள்ள சத்தியஞான சபை முன், 99 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்தும், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள இடம்
வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள இடம்

அப்போது, "ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சர்வதேச மையத்தில் ஏற்படுத்தப்பட உள்ள 16 வசதிகளை விளக்கி தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. அதில் 17 – 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுற்றுச்சுவரின் எச்சங்கள் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதியில் எந்த கட்டுமானமும் நடைபெறவில்லை. பணியின் போது ஏதேனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் கண்டறியப்பட்டால் அவை பாதுகாக்கப்படும்" என்று தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

இதையடுத்து, "தொல்லியல் துறை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தால் தான் முறையாக இருக்கும்" என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார். இதை ஏற்றுக் கொண்ட தலைமை வழக்கறிஞர், "மூன்று பேர் கொண்ட தொல்லியல் நிபுணர் குழு அமைத்து, ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தொல்லியல் நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். இந்த வழக்கை கோவில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வுக்கு மாற்றியும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

இதையும் வாசிக்கலாமே...


“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in