ஆரோக்கிய பானங்கள் பிரிவில் இருந்து போர்ன்விட்டாவை நீக்குங்கள்...வெளியானது முக்கிய உத்தரவு!

போர்ன்விட்டா
போர்ன்விட்டா

போர்ன்விட்டா உள்ளிட்ட அனைத்து பானங்களையும் ஆரோக்கிய பானங்கள் என்ற பிரிவில் இருந்து நீக்குமாறு மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போர்ன்விட்டா உள்ளிட்ட அனைத்து பானங்களையும் ஆரோக்கிய பானங்கள் என்ற பிரிவில் இருந்து நீக்குமாறு மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 10-ம் தேதி, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்

அந்த உத்தரவில்," குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய (சிபிசிஆர்) சட்டம், 2005, பிரிவு 3-ன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்ட ரீதியான அமைப்பு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்). இந்த ஆணையம், சிஆர்பிசி சட்டம் 2005 இன் பிரிவு 14 -ன் கீழ் நடத்திய விசாரணைக்குப் பின்னர், ஆரோக்கிய பானங்கள் வரையறை தொடர்பாக ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) மற்றும் மொண்டெலீஸ் இந்தியா உணவு பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சமர்ப்பித்த விதிகள் அடிப்படையில் எஃப்எஃப்எஸ் சட்டம் 2006-ன் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்ன்விட்டாவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவை விட அதிகமாக சர்க்கரை அளவு இருப்பதை என்சிபிசிஆர் அமைப்பு விசாரணையில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து மத்திய அரசு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்

முன்னதாக, பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்யத் தவறிய ஆரோக்கிய பானங்களை விநியோகிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு எஃப்எஸ்எஸ்ஏஐ அமைப்புக்கு என்சிபிசிஆர் அறிவுறுத்தியிருந்தது. ஒழுங்குமுறை அமைப்பின் கூற்றுப்படி, ஆரோக்கிய பானம் நாட்டின் உணவுச் சட்டங்களில் வரையறுக்கப்படவில்லை.

எஃப்எஸ்எஸ்ஏஐ, இந்த மாத தொடக்கத்தில், பால் சார்ந்த அல்லது மால்ட் அடிப்படையிலான பானங்களை 'ஆரோக்கிய பானங்கள்' என சந்தைப்படுத்தப்படுவதற்கு எதிராக இ-காமர்ஸ் வலைதளங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியது. யூடியூபர் ஒருவர் தனது வீடியோவில் போர்ன்விட்டாவின் ஆரோக்கியமற்ற தன்மை குறித்து கேள்வியெழுப்பியிருந்தார்.

மின்னணு வணிகம்
மின்னணு வணிகம்

போர்ன்விட்டாவில் அதிகப்படியான சர்க்கரை, கோகோ திடப்பொருள்கள் மற்றும் கேன்சர் உட்பட குழந்தைகளுக்கு கடுமையான உடல்நலக் கேடு உள்ளிட்ட தீங்குகளை விளைவிக்கும் நிறமிகள் இருப்பதாக குற்றம்சாட்டினார். அதன்பிறகே இந்த விவகாரம் பூதாகரமானது. இந்நிலையில் தற்போது போர்ன்விட்டா உள்ளிட்ட பானங்களை ஆரோக்கிய பானங்கள் பிரிவின் கீழ் பட்டியலிடுவதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   

‘தலித் அரசியல் ரஜினிக்கு தெரியுமா?’ ரசிகர்கள் ஆவேசம்!

‘வேண்டாம்... கைவிடுங்க...’ ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

மீனவர்களில் வங்கிக் கணக்கில் ரூ.5,000... தடைக்காலம் தொடங்கும் நிலையில் நிவாரணம்!

திருமண நாளைக் கொண்டாடி விட்டு, நள்ளிரவில் தூக்கில் தொங்கிய 6 மாத கர்ப்பிணி!

சர்ச்சை வீடியோ: ஹெல்மெட் போடலை... நம்பர் பிளேட் கிடையாது... ராதிகாவுடன் பைக்கில் பறந்த சரத்குமார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in