காணாமல் போன மனநலம் பாதித்த சிறுவன் 6 மணி நேரத்தில் மீட்பு... உதவிய 'கியூ ஆர் கோட்' தொழில்நுட்பம்!

காணாமல் போன சிறுவன் 'கியூ ஆர் கோட்’ தொழில்நுட்பம் மூலம் மீட்பு
காணாமல் போன சிறுவன் 'கியூ ஆர் கோட்’ தொழில்நுட்பம் மூலம் மீட்பு

மகாராஷ்டிராவில் காணாமல் போன 12 வயது மாற்றுத் திறனாளி சிறுவன், 'கியூ ஆர் கோட்' தொழில்நுட்பம் காரணமாக 6 மணி நேரத்தில் கண்டறியப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம், மத்திய மும்பையின் வோர்லி பகுதியைச் சேர்ந்த 12 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன், கடந்த வியாழக்கிழமை வீட்டிலிருந்து திடீரென காணாமல் போனார். இந்நிலையில் சிறுவனின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர். நல் வாய்ப்பாக அவர்கள் கையாண்டிருந்த ஒரு வழிமுறை, காணாமல்போன சிறுவனை மீண்டும் பெற்றோரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

'கியூ ஆர் கோட்’  தொழில்நுட்பம் மூலம் சிறுவன் மீட்பு
'கியூ ஆர் கோட்’ தொழில்நுட்பம் மூலம் சிறுவன் மீட்பு

சிறுவனின் கழுத்தில் பெற்றோர் அணிவித்திருந்த டாலரில் ஒரு 'கியூ ஆர் கோட்’-ஐ இடம்பெற்றிருந்தது. அதை ஸ்கேன் செய்தால், சிறுவனின் பெற்றோர் குறித்த விவரங்கள் தொடர்பு எண் வரும். இந்நிலையில், அங்குள்ள கோலாபா பகுதியில் ரீகல் சினிமா சந்திப்பு பகுதியில், காணாமல் போன சிறுவன் சுற்றித் திரிந்துள்ளார். அவரது நடவடிக்கையைக் கண்ட ஒருவர் போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் அங்கு வந்து சிறுவனை மீட்டனர். பின்னர், அவனது கழுத்தில் கிடந்த டாலரில் 'கியூ ஆர் கோட்’ இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். அதனை ஸ்கேன் செய்தபோது திரையில் செல்போன் எண்கள் வந்துள்ளன. பின்னர், அந்த எண்ணில் தொடர்புகொண்டபோது அது சிறுவனின் பெற்றோருடைய எண் என்பது தெரியவந்தது.

'கியூ ஆர் கோட்’
'கியூ ஆர் கோட்’

தங்களது மகன் குறித்த தகவல் வந்ததும் அவரது பெற்றோர் நிம்மதியடைந்தனர். அதைத் தொடர்ந்து காவல் நிலையத்துக்கு சென்று தங்கள் மகனை மீட்டனர். சிறுவன் காணமால் போன 6 மணி நேரத்தில் மீட்கப்பட்டதாக அவனது பெற்றோர் தெரிவித்தனர். தற்போதைய டிஜிட்டல் உலகில், மனநலம் பிறழ்ந்த ஒரு சிறுவனை கண்டறிய, 'கியூ ஆர் கோடு' தொழில்நுட்பம் உதவியிருப்பது சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   

‘தலித் அரசியல் ரஜினிக்கு தெரியுமா?’ ரசிகர்கள் ஆவேசம்!

‘வேண்டாம்... கைவிடுங்க...’ ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

மீனவர்களில் வங்கிக் கணக்கில் ரூ.5,000... தடைக்காலம் தொடங்கும் நிலையில் நிவாரணம்!

திருமண நாளைக் கொண்டாடி விட்டு, நள்ளிரவில் தூக்கில் தொங்கிய 6 மாத கர்ப்பிணி!

சர்ச்சை வீடியோ: ஹெல்மெட் போடலை... நம்பர் பிளேட் கிடையாது... ராதிகாவுடன் பைக்கில் பறந்த சரத்குமார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in