வெப்ப அலை காரணமாக வாக்கு சதவீதம் குறையும் அபாயம்: தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை!

இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை
இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை

இந்தியாவில் அடுத்த சில தினங்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறையாமல் இருப்பதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் இன்னும் 6 கட்ட தேர்தல்கள் எஞ்சியுள்ளன. வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வரவிருக்கும் இரண்டு, மூன்று நாட்கள் நாட்டில் வெப்ப அலை தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகாவில் வெப்பம் அலை குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தினருடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை
வானிலை ஆய்வு மையத்தினருடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை

இம்மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகள், இரண்டாம் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவை எதிர்கொள்ள உள்ளன. இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள், இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவருடன் நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டினர்.

இதில், வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க சாத்தியமான முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குடிநீர், நிழற் பந்தல் மற்றும் விசிறிகள் போன்ற தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களின் தலைமை தேர்தல் ஆணையர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

வாக்குப்பதிவு (கோப்புப் படம்)
வாக்குப்பதிவு (கோப்புப் படம்)

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மேற்கு வங்கத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளோம். பீகாரில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கும்.

24 மணி நேரத்துக்குப் பிறகு கிழக்கு உத்தரப்பிரதேசத்திலும், இரண்டு நாட்களுக்குப் பிறகு மேற்கு உத்தரப்பிரதேசத்திலும் வெப்ப அலை எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் வெப்பமும், ஈரப்பதமும் என மாறுபட்ட வானிலை இருக்கும்” என்றார்.

வரும் நாள்களில் வெப்ப அலை எச்சரிக்கை
வரும் நாள்களில் வெப்ப அலை எச்சரிக்கை

வெப்பநிலை காரணமாக வாக்குப்பதிவு குறைந்துவிடுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற வானிலைகளில் குடிமக்கள் குறிப்பாக மூத்த வாக்காளர்கள் வாக்களிப்பதை தவிர்க்க நேரும் அபாயம் உள்ளது. எனினும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in